தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/அவராச்சன் அண்ட் சன்ஸ் மலையாளம்

அவராச்சன் அண்ட் சன்ஸ் மலையாளம்

அவராச்சன் அண்ட் சன்ஸ் மலையாளம்


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

காலையில் கடையில் டீ குடித்து, பீடி புகைத்து, திரும்பும் வழியில் குடும்பத்திற்கு வடை பார்சல் செய்து, பழைய பாடலை முணுமுணுத்தபடி குளித்து, கைசெலவுக்காக ஏதாவது வேலை பார்த்து, மாலையில் நண்பர்களுடன் மது அருந்தி, உறங்கச் செல்லும் 50 வயது நபரை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?

மனைவியை இழந்து இப்படி வாழும் அவராச்சனைப் பார்த்து உள்ளூரில் சிலருக்கு பொறாமை; இளைஞர்களான இரு மகன்களுக்கோ வருத்தம்; கூடுதலாக, அவர் செய்யும் வம்பு தும்புகளால் மகன்களுக்கு தலைவலி. இப்படியாக கழியும் அவராச்சனின் தினசரிகளில் அவர் பெறும் சில படிப்பினைகளே திரைக்கதை!

எதற்காகவும் அலட்டிக் கொள்ளாத, எதிர்கால குறிக்கோள் இல்லாத நபரை பற்றி கதை அமைக்க முயல்கையில், அக்கதையும் அந்நபரைப் போலவே சுவாரஸ்யம் இல்லாமல் போகக்கூடும்; ஆனால், இச்சவாலில் வெற்றி கண்டிருக்கிறது தம்பி மற்றும் ஜோசப் விஜீஷின் எழுத்து!

‘ஆவேசம் பொங்க வசனம் பேசி, உறவுக்காக பாசத்தில் பதறி துடித்து, அவராச்சனை நம் கண்முன் நிறுத்த முடியாது; ஆனால், கொட்டாவி விடுவதில் துவங்கி, வெடிக்கும் கொள்ளளவை எட்டிய பலுான் போன்ற முகத்தில் மிகநுண்ணிய உணர்வுகளை வெளிக்காட்டுவதில் இதனை சாதிக்க முடியும்’ என்றுணர்ந்து நடித்திருக்கிறார் பிஜு மேனன்; இதனால், அவராச்சனின் மனம் நமக்கு தோழனாகிறது!

கடற்கரை கிராமம், மலை கிராமம் என இருவேறு நிலப்பரப்புகளை தேர்வு செய்து, அதில் வானத்தை வில்லாக வளைக்கும் லட்சியங்கள் ஏதுமின்றி, அன்றாடத்தை கழிக்கும் எளிய மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி, என்னவோ சொல்ல முயன்றிருக்கின்றனர். கதையின் எந்த இடத்திலும் திருப்பங்கள் இல்லை; கதாபாத்திரங்களுக்கு இடையில் பிணக்குகளும் இல்லை! இதனால் தானோ என்னவோ...

யதார்த்த வாழ்வியல் அனுபவங்களுடன் வாழ்பவர் வீட்டில் ஒருநாள் தங்கி திரும்பும் சுகம் கிடைக்கிறது.

@block_B@பொறுப்பற்ற தந்தையின் சுகவாழ்க்கை@@block_B@@

@block_B@மழைக்கு ஒதுங்கிய தேநீர் கடையில் சூடான பஜ்ஜியும் கார சட்னியும் ருசித்த திருப்தி@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us