தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/சென்னை லவ் ஸ்டோரி (தெலுங்கு)

சென்னை லவ் ஸ்டோரி (தெலுங்கு)

சென்னை லவ் ஸ்டோரி (தெலுங்கு)


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆழமான காதல் கடல்

'ஒருதடவை பூ உதிர்ந்திருச்சுன்னா மறுபடியும் செடியில ஒட்ட வைக்க முடியாதுங்க; அதுமாதிரி தான் காதல்' - இந்த பூவே உனக்காக வசனத்திற்கு, தன் இசையால் ஆராதனை செய்திருப்பாரே எஸ்.ஏ.ராஜ்குமார்... அவர் போல இப்படத்திற்கு மணிசர்மா; ஆம்... காதல் கொண்ட இரு உயிர்களின் மனபாரத்தை நமக்கு கடத்துகிறது அவரது இசை!

காதல் முறிவால் செயலிழந்த கடிகாரம் போல் அவள்; வெள்ளித்திரை கனவுடன் அவன். பல நாள் பழக்கத்தில் ஒருநாள், 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா' என அவள் கேட்க, கண்ணீரால் சம்மதம் சொல்கிறான் அவன். சில நாட்களிலேயே, அவனை நினைத்து அவள் நாள் தோறும் கண்ணீர் வடிக்கும் நிலை; அவளுக்காக அவன் எ ன்ன செய்கிறான்?

'அவள் - அவன்' இடையிலான அன்பை வைத்து வழக்கமான காதலுக்கும், தெய்வீக காதலுக் குமான இடைவெளியை மாறுபட்ட தொரு கோணத்தில் பார்த்தி ருக்கிறார் இயக்குனர் ரவி நம்பூரி!

அவளது பழுதுபட்ட மனதில் வெடிக்கும் உணர்வுகளை, மடைதிறந்த வெள்ளமாய் தன் நடிப்பில் தந்திருக்கிறார் ஸ்ரீ கவுரி பிரியா; தன் காதல் மீது விதி எய்த அம்புகளை தாங்கியபடி வரும் இவரது பாத்திரமே இப்படைப்பின் அச்சாணி. காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவனாக கிரண் அப்பாவரம்; எப்போதும் உதிரா புன்னகையுடன் கவர்கிறார்.

இக்கதையில் பொழியும் சென்னை மழை, பல உணர்வுகளை நமக்குள் கிளப்பி விடுகிறது; குறிப்பாக, 'குருதுண்டா...' பாடலில் மழைக்கு இணையாக நம் மனம் நனைக்கிறது மணிசர்மாவின் இசை; அவருக்கு மீண்டும் ஒரு பாராட்டு! அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதை என, சென்னையை மட்டம் தட்ட முயன்ற விஷயங்களில் யதார்த்தம் இல்லை என்பதால் அவை மனதில் பதியவில்லை.

'முடிவு என்னவாக இருக்கும்' எனும் ஆர்வத்தை துாண்டுகிறது முதல் பாதி; 'இதுதான் முடிவு' என்று ஆரம்பத்திலேயே கணிக்க வைக்கிறது இரண்டாம் பாதி; ஆனால், 'அவள் - அவன்' இணைந்து சமைக்கும் 'காதல் ரசம்' இக்குறையை மறக்க வைத்து மனதிற்குள் ருசிக்கிறது.

ஆக...

குணா குகைக்குள் இறங்கி, 'அதையும் தாண்டி புனிதமானது' என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us