தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/கான் சிட்டி

கான் சிட்டி

கான் சிட்டி


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உரிக்க உரிக்க உரிக்க... ம்ஹும்

சரவணன் - மித்ரா, மகன் ஜீவா மற்றும் மித்ராவின் அண்ணன் ஜாக்கி, தாயார் ஜானகி ஆகியோர் உணவகம் நடத்தி வருகின்றனர். ஜீவா கடத்தப்படும் சூழலில் இக்குடும்பம் பற்றிய ஒரு முடிச்சு அவிழ்கிறது. இதன்பின், ஏழு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் செய்த ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வருகிறது. யார் இவர்கள்; இவர்களின் அடுத்த நகர்வு என்ன?

கதை சுருக்கத்தை படித் ததும், 'திருப்பங் களும், பாசப் பிணைப்பும் கொண்ட திரைக்கதை போல' என்று தோன்றலாம். உண்மைதான்; ஆனால், இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் சுவாரஸ்யமாய் திரைக்கதை பின்னும் வாய்ப்புகளை துளிகூட பயன்படுத்தவில்லை; முடிச்சிட வேண்டிய இடங் களையும், முடிச்சு அவிழ்க்கும் சூழல்களையும் 23 ம் புலிகேசி அமைச்சரவையின் மூத்த அமைச்சரது திறனுடன் வடித்திருக்கிறார்!

தனித்துவமான குரல் வளம் உள்ள அர்ஜுன் தாஸை, 'மிமிக்ரி' கலைஞர் போல் வெளிப்படுத்த விரும்பிய இயக்குனரின் முயற்சி, நெருங்கி வருபவரின் வாய் துர்நாற்றம் போல் மூச்சடைக்கிறது. 'சரவணன் அண்ட் கோ' ஏமாற்று பாதையில் செல்வதற்கான காரணங்கள் மிகவும் சராசரி தன்மையில் இருப்பது, 'பணக் கஷ்டம் இருந்தால் பிறரை ஏமாற்றலாம்' எனும் தவறான எண்ணம் விதைக்கிறது!

மேஜையைத் தட்டி கருத்தை வரவேற்கும் சட்டசபையின் நல்மரபு போல், வடிவுக்கரசியின் நடிப்பை சில இடங்களில் பாராட்டத் தோன்றுகிறது. அர்ஜுன் தாஸ் 'பீட்சா டெலிவரி' நபராக நடித்து தந்திரம் செய்வது, வீடியோ காலில் பேசி ஏமாற்றுவது எல்லாம் சிகிச்சையற்ற சிரங்குகள்; யோகி பாபுவின் நடிப்பு பாவங்கள் காலாவதி தேதியை கடந்து தலை சொறிந்தபடி சிரிக்கின்றன!

'அந்த படத்திற்கு இது தேவலை' என நம்மை சொல்ல வைப்பது ஒருவித தந்திரம். அந்தவகையில், சில 'மொக்கை' படங்களுடன் ஒப்பிட்டால் இது 'படுமொக்கை' படம் இல்லைதான்; ஆனால், புதுமைக்கு சற்றும் இடம் கொடுக்காத இப்படைப்பு பல இடங்களில் நம் நடு நெஞ்சில் ஏறி மிதிக்கிறது.

ஆக...

'ஏமாற்றுதல் - ஏமாறுதல்' பற்றிய இப்படம் நம்மை ஏமாற்றும் முயற்சியில் ஏமாறவில்லை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us