தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/டோரதி

டோரதி

டோரதி


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாலின பாகுபாடு' ஒழிக்க கார்த்திக் சுப்பராஜின் முத்தம்

'இது என்ன கருமம்டா இது... இளையராஜா ஒரு பாட்டு பாடி முடிக்கிறதுக்குள்ளே காதலை காமமா மாத்திட்டானுங்க' - இப்படியும், இறுதியில் எண்ணத் தோன்றும். ஏனெனில்... 'தன்னை பெண்ணாக உணரும் ஒரு ஆண்மகனை 'திருநங்கை' என்று சொல்வதோடு, திருமணம் செய்து கொள்ளும் உறுதியுடன் முகம் ஏந்தி முத்தமிடு' என்கிறாள் டோரதி.

'நான் தேடும் செவ்வந்திப் பூவிது...' பாடலின் தேனிசை பின்னணியில் டைட்டில்; பூவில் விழுந்து புரளும் வண்டாகிப் போகிறது நம் இதயம்! பல காட்சிகளுக்கு ஒளியால் 'கிரீடம்' சூட்டி இருக்கிறது திருவின் ஒளிப்பதிவு; அந்த எல்லா காட்சிகளுக்கும் உயிர் புகட்டியிருக்கிறது இளையராஜாவின் இசை!

சில காட்சிகளில் நம் உயிர் எடுக்கிறது கார்த்திக் சுப்பராஜின் இயக்கம். குறிப்பாக, தொங்கிய நிலையில், தான் 'பேசாது' பிறரை கீர்த்தி சுரேஷ் பேச வைக்கும் காட்சியில், சுலபமாக பிடிபடாத குறியீடுகள்; உச்சரிப்பு வேகத்தால் வீணாகும் வசனங்கள்; இடைவேளை வரை தொடர்கின்றன இப்படியான இம்சைகள்!

'ஆம்பள எப்பவும் அழக்கூடாது' என்று அறிவுரை சொன்னவன், 'பொம்பள எப்பவும் அழக்கூடாது' எனும் அறிவுரை பெறும்வகையில் திரைக்கதை அமைத்திருக்கும் கார்த்திக் சுப்பராஜை பாராட்ட, போன் நோண்டாமல் படம் பார்க்கும் பொறுமை, பக்குவம் மிக அவசியம்!

நாயகர்களில் ஒருவரான ரிஷிகாந்த், ரஜினி காந்த் போல் நடிக்க முயல்வதாக தெரியவில்லை; ஆனால், அவர் இயல்பாய் செய்வது அத்தனையும் அந்தகாலத்து ரஜினியை நினைவூட்டுகின்றன. கதையின் இன்னொரு நாயகனும் மிகச்சிறந்த நாயகியுமாய் சனந்த்... பிரமாதம்; இந்தாடி... எங்களை ஆசிர்வாதம் பண்ணு!

இரண்டாம் பாதி முழுக்கவே பெண்ணாய் உணரும் ஆணின் பரிதவிப்புகள், பரிதாபங்கள்; இடைவேளை வரையிலான நம் வெறுப்பும், அதன்பின் துவங்கும் புது அருவருப்பும் கடைசி காட்சிக்குள்ளாக உலர்ந்து போவது திரைக்கதை செய்திருக்கும் மாயம்; இதற்கு, க்ளைமாக்ஸிற்கு முன் வரும் மலை மீதான காட்சியும், அதனை தன் தோளில் சுமந்திருக்கும் இசைஞானியும் முக்கிய காரணம்!

காத்திருத்தல் சுகம்... இதிலோ, பெரும் சுகம்; ஆம்... 'முத்துமணிச்சரம்...' பாடல் க்ளைமாக்ஸில் தான் ஒலிக்கிறது.

ஆக...

'எதிலும் அழகை கண்டறிவேன்' எனில் இதனை ரசிக்கலாம்; இதில், எமக்கு அழகு... இளையராஜா, சனந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us