தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/கஜப் ராத் (ஹிந்தி)

கஜப் ராத் (ஹிந்தி)

கஜப் ராத் (ஹிந்தி)


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமாவாசை இரவு பவுர்ணமி இரவாகும் கதை

அந்தவகை இந்தவகை என்றில்லாது எல்லாவகையிலும் கெட்டுப்போய் இருக்கும் ஒரு காவல் அதிகாரிக்கு, பாலியல் தொழில் செய்யும் பெண்களை கைது செய்யும் வாய்ப்பு வருகிறது. அந்த இரவில், அந்நிகழ்வில், தான் எவ்வளவு கெட்டவன் என்பதை நமக்கு புரிய வைக்கும் அதிகாரி, அடுத்து வரும் ' அந்த' அலைபேசி அழைப்பு நிகழ்த்தும் தொடர் சம்பவங் களால் நல்லவனாக மாறுகிறார்; இக்கதைக்கு கருவான இளம் பெண்ணின் உயிர் காக்கிறார்.

'செய்யும் தொழிலை ஒரு பெண் எவ்வளவு நேசித்து இருக்கிறாள்' என்பதை, மரணப்படுக்கையில் அவளை கிடத்திய காரணம் மூலமும், அவளது கனவுகளை சொல்லி புலம்பும் அவளது பெற்றோரின் கண்ணீர் மூலமும் அறியும் கணத்தில் நல்லவனாக மாறும் காவல் அதிகாரியாய் மனோஜ் பாஜ்பயீ; அய்யோ பரிதாபம்... அழுத்தமில்லாத இந்த காரணங்களில் நல்லவனாக மாறும் நடிப்பிற்காய் பெரும் சிரமப்பட்டிருக்கிறார்.

ஓர் இரவில் நிகழும் கதை; மனோஜின் பாதுகாப்பில் உள்ள பெரும் காயமுற்ற பெண்ணின் உயிர் பறிக்க சி.பி.ஐ., அதிகாரி முயற்சிக்கிறார். அவளை காப்பாற்ற என்.ஐ.ஏ., வருகிறது. அதிகாரவர்க்கத்தை அச்சமுறச் செய்யும் சமூக ஆர்வலராய் ஓர் அழகுப் பெண் வருகிறார். இவர்களின் முயற்சிகளுக்கு இடையில் மனோஜ் அவளை காப்பாற்ற வேண்டும்.

'அந்த பெண்ணிற்கு என்ன நிகழ்ந்தது; ஏன் அது நிகழ்ந்தது' என்பதை க்ளைமாக்ஸிற்கு சற்றுமுன் வரை சொல்லாது, விறுவிறுவென நகர்கிறது திரைக்கதை; 'நிகழ்ந்தது என்ன' என்பதைச் சொல்லும் 'ப்ளாஷ்பேக்' காட்சிகள், நம் 'வந்தே பாரத்' வேகத்திற்கு இணையாய் பறக்கின்றன.

இப்பயணம் சலிப்படையா வண்ணம் பார்த்துக் கொள்ளும் தித்திப்பு தேநீராய், சில கொஞ்சல்கள், சில கவர்ச்சி காட்சிகள்; குறிப்பாக, சமூக ஆர்வலராய் 'இழுத்துப் போர்த்தி' அறிமுகமாகும்ஷ்ரத்தா தாஸ், 'காற்றாட' நடந்து வருகையில்... ப்ப்பா... தரதரவென கொதிக்கிறது திரைக்கதை நம் கையில் தந்த தேநீர்.

'கொரோனா' காலத்தை நினைவூட்டி நிறைவுறும் கதை, 'தடுப்பூசி' குத்திய இடத்தை தடவிப் பார்க்க வைக்கிறது; இவ்வகையில் படைப்புக்கு வெற்றி.

@block_B@'விசில்' அடிக்கத் துாண்டும் காட்சிகள் இல்லாததால், அறிவார்ந்த 'விசில்' பிரியர்களுக்கு இப்படம் பிடிக்காது@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us