sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

 மனம்கொத்தி பறவை

/

 மனம்கொத்தி பறவை

 மனம்கொத்தி பறவை

 மனம்கொத்தி பறவை


PUBLISHED ON : மார் 08, 2026

Google News

PUBLISHED ON : மார் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பாட்டி குரலில் கதை சொல்லும் செயலி' - இந்த கற்பனைக்கு விதை போட்டது இவரது ஐந்து வயது மகள்.

இந்த வார மனம்கொத்தி: நித்யா

அடையாளம்: 'ஓஹோ கிட்ஸ்' ஸ்டார்ட் அப்

இருப்பிடம்: சென்னை

'எங்களது செயலி குழந்தை களுக் கான மனஇறுக்கத்தை தளர்த்துகிறது; கற்பனைத்திறனை வளர்க்கிறது; இது, கதைகளை 4 - 15 நிமிடங்களுக்குள் ஒலி வடிவத்தில் சொல்லிவிடும்' என்கிறார் நித்யா.

'ஓஹோ கிட்ஸ்' பிறந்தவிதம் எப்படி?

நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஓர் விழாவில், நானும் என் நண்பர்கள் இருவரும் இப்படி பேசினோம்.

'பெற்றோர் அருகாமை அதிகம் கிடைக்காத குழந்தைகளுக்காக, ஆரோக்கியமான கதைகளை உள்ளடக்கிய சாதனமோ, செயலியோ உருவாக்கலாமா?' - இது நான்.

'அக்கதைகள் பரிச்சயமான பாட்டி குரலில் இருந்தால் குழந்தைகளை அது வசப்படுத்தும்; ஏ.ஐ., தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்கும்!' - இது, எங்கள் நிறுவன சி.டி.ஓ., ஹரி மற்றும் சி.சி.எம்.ஓ., சங்கர்.

எங்கள் மூன்று பேரின் உழைப்போடு தொழில்நுட்பம் கைகோர்க்க, 3 - 13 வயது குழந்தைகளுக்காக 'கதை பெட்டி' எனும் பெயரில் ஏப்ரல், 2025ல் உருவான செயலி, ஆகஸ்ட் மாதம் 'ஓஹோ கிட்ஸ்' என வடிவம் பெற்றது. எங்கள் கற்பனை கதைகளும், பாத்திரங்களும் செயலியின் பலமானது!

பத்து லட்சம் ரூபாய் முதலீட்டோடு துவக்கப்பட்ட இந்த புத்தொழிலுக்கு, தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு - 2025, 'டான்சீட்' திட்டம், ஐ.ஐ.டி., உள்ளிட்டவை மூலம் பாராட்டும், ஊக்கத்தொகையும் கிடைத் து இ ருக்கின்றன.

ஓராண்டு வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது?

இந்திய மொழிகளில் கதை சொல்வது என நவம்பர் 2025ல் இலக்கை விரிவுபடுத்தி, இரு மடங்கு வேகத்தோடு இயங்கத் துவங்கினோம்.

எங்கள் செயலியை உலகம் முழுக்க ஒரு லட்சம் பேர் பயன் படுத்தி விட்டனர். 1,550 சந்தா தாரர்கள் இருக்கின்றனர்; ரூ.99 கட்டணத்தில், 3 மாதங்களுக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகள் கேட்கின்றனர்.

பாட்டி குரலோடு குழந்தைகளின் உறவினர் குரல்களில் கதையை மாற்றித்தரும் தொழில்நுட்பமும், கதாபாத்திரங்களுக்கு விரும்பும் பெயர்களை சூட்டிக் கொள்ளும் வசதியும் இச்செயலி யின் சிறப்பம்சங்கள்.

'உலக குழந்தைகளின் மொழி யில், அவர்களுக்கு பிடித்தமான குரலில் கதை சொல்ல வேண்டும்' என்பதை தனது 'ஓஹோ கிட்ஸ்'ன் கனவாகச் சொல்கிறார் சி.இ.ஓ., நித்யா.

'எனது பேரனுக்காக 'ஓஹோ கிட்ஸ்' செயலியை 'கூகுள் ப்ளே ஸ்டோர்' மூலம் தரவிறக்கம் செய்தேன். செயலி சொல்லும் 'டிடெக்டிவ்' டேனி, வேடன் மாஹி கதை மாந்தர்கள் தற்போது என் பேரனின் நண்பர்கள். என் குரலில் திருக்குறள் கதைகளை கேட்கிறான்.

ஸ்மார்ட்போன், 'டிவி' பார்க்கும் நேரத்தை கணிசமாக குறைத்திருக்கிறான்!'

ஸ்ரீகலா, சென்னை.

நித்யா: 90033 66934






      Dinamalar
      Follow us