sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/மனம்கொத்தி பறவை

மனம்கொத்தி பறவை

மனம்கொத்தி பறவை


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத நான்கு வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, 'சைகை மொழி'யில் மாறுபட்ட முறையில் ஆங்கில மொழிப் புலமை வளர்க்கிறது 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான இந்த இணையதளம்!

இந்த வார மனம்கொத்தி: ஷ்ரதா அகர்வால்

அடையாளம்: 'சைன்சேடு'

இருப்பிடம்: சென்னை

இந்த துவக்கம் எல்லாரும் சொல்லும்விதத்தில்...

ஆமாம்... என்னுடையதும் கிட்டத்தட்ட அப்படித்தான்; ஆங்கில வழி கல்வியில் சென்னை சிந்தி மாடல் பள்ளியில் துவங்கி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரி, இங்கிலாந்து வார்விக் பல்கலைக் கழகம் வரையிலும், என் படிப்பு காலம் முழுக்க, காது கேளாத, வாய் பேச இயலாத மாணவியாக நான் அனுபவித்த பிரச்னைகள் ஏராளம்!

என் போன்ற குறைபாடு கொண்டவர்கள் இப்பிரச்னைகள் தவிர்க்க இந்த 'ஸ்டார்ட் அப்' தளத்தை துவக்கினேன்.

மடிக்கணினி தட்டச்சு மூலம் தன் 'ப்ளாஷ்பேக்' சொல்லும் 29 வயது ஷ்ரதா அகர்வால், சமஸ்கிருதத்தில் 'சேடு' என்பதற்கு 'பாலம்' என்று பொருள் தருகிறார். கூடவே, 'இந்தியா முழுக்க களஆய்வு செய்து நான் தயாரித்திருக்கும் மேம்படுத்தப் பட்ட சைகை மொழி வீடியோக்களே எனது 'ஸ்டார்ட் அப்'பின் தனித்துவம்' என்கிறார்.

எப்படி கற்றுத் தருகிறது சைன்சேடு?

இத்தளமானது, 'ஆல்பபெட்ஸ்' பாடப்பிரிவு தவிர்த்து ஏழு நிலைகளில் ஆங்கில வார்த்தை கள், இலக்கணம் கற்பிக்கிறது. படங்கள், குறுக்கெழுத்து புதிர்கள், கோடிட்ட இடம் நிரப்புக உள்ளிட்ட சுவாரஸ்ய முறைகளில், இந்திய சைகை மொழி உதவியோடு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் இத்தள பயன்பாட்டிற்கு தற்போது வரை கட்டணமில்லை!

முன்சொன்ன ஏழு நிலைகளில், 37 தலைப்பு களில், 88 பாடங்கள் ஐந்து படிநிலைகளில் கற்பிக்கப்படுகின்றன. இதில், மூன்று விளையாட்டு முறைகளும், 160 படக் கதைகளும் அடங்கும். இந்தியா முழுவதுமுள்ள காது கேளாதோரைச் சென்றடையும் வகையில் சில அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறார் ஷ்ரதா.

'சைன்சேடு'க்கு இதுவரையிலான அங்கீகாரங்கள்?

'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' மூலமாக 2024ல் ரூ.5 லட்சம் வெகுமதி, 'என்.சி.பி.இ.டி.பி., - எம்பசிஸ் யுனிவர்சல் டிசைன்' விருது மற்றும் பரிசு, 'கோவா - சர்வதேச பர்பிள் பெஸ்ட் 2025-' அங்கீகாரம், யு.என்.டி.பி., ஆதரவு என தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரம் இத்தளத்திற்கு கிடைத்திருக்கிறது.

விரைவில், 16 வயதுக்கு மேற்பட்ட காது கேளாதோருக்காக, ஆங்கில எழுத்து திறன் மேம்படுத்தும் 'மொபைல் செயலி'யை அறிமுகப்படுத்த இருக்கிறார் ஷ்ரதா.

இந்தியா முழுக்க களஆய்வு செய்து நான் தயாரித்திருக்கும் மேம்படுத்தப்பட்ட சைகை மொழி வீடியோக்களே எனது 'ஸ்டார்ட் அப்'பின் தனித்துவம்!

மனதில் இருந்து...

'காது கேளாத, வாய் பேச இயலாத மாணவர்களுக்கான இத்தளத்தின் பயன் பாட்டால், ஆங்கில மொழிப் புலமையில் மாணவர்கள் மெருகேறி இருக்கின்றனர்!'

பூபிகா, சிறப்பு பள்ளி ஆசிரியை, சென்னை

www.signsetu.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us