தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/அவியல்/மனம்கொத்தி பறவை

மனம்கொத்தி பறவை

மனம்கொத்தி பறவை


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செல்லங்களுக்கு ஒரு செயலி



சந்தைகளில் அல்லாது கால்நடைகள் வாங்க விற்க விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக் கும் பெரிதும் உதவுகிறது, 28 வயது இளைஞனின் இந்த ஸ்டார்ட் அப்!

இந்த வார மனம்கொத்தி கு.விக்னேஷ் ஆனந்த்

அடையாளம் 'பின்டிகஸ்' மொபைல் செயலி

இருப்பிடம் ஆற்காடு, ராணிப்பேட்டை

'விவசாய குடும்பமும், கை கூடாத கால்நடை மருத்துவர் கனவும், என் நாட்டு மாடுகளை விற்பதில் சந்தை தந்த மோசமான அனுபவமுமே இச்செயலி உருவாவதற்கான துவக்கப்புள்ளி' என்று பேசத் துவங்குகிறார் பொறியியல் பட்டதாரியான விக்னேஷ்.

கல்லுாரி தோழன் வசந்த் இணை நிறுவனராக, சுற்று வட்டார 12 கிராமங்களின் கால் நடை மற்றும் கோழிப்பண்ணை விவசாயிகள், வியாபாரிகள் 800 பேரிடம் பேசினோம்.

* சந்தைகளுக்கு கால்நடைகளை அழைத்து வருவதின் வாகன செலவு

* இடைத்தரகர்களுக்கான அதிக தரகு தொகை

* முரணான சந்தை விலை நிர்ணயம்

* ஓரிடத்தில் கூடும் ஏராளமான கால்நடைகளால் தொற்று அபாயம்

* போதிய உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லா கால்நடை சந்தைகள்

இப்படியான 'கள பிரச்னைகள்' இருப்பதை அவர்களின் மூலம் உணர்ந்து கொண்டபின் பணியில் இறங்கினோம்; ஜூன் 2023ல் 'கூகுள் ப்ளே ஸ்டோர்' மூலம் எங்கள் செயலி அறிமுகமானது; தற்போது, 50 ஆயிரம் அளவில் பதிவிறக்கம் கண்டிருக்கிறது.

இச்செயலியில்...

'விற்க விரும்பும் ஆடு, மாடு, கோழி இனங்களின் படங்களை, அவற்றின் வயது, எடை, சினை நிலை, நிர்ணய விலை உள்ளிட்ட அடிப்படை தகவல்களுடன் இச் செயலியில் பதிவேற்றலாம். வாங்க விருப்பமுள்ளவர்கள் நவீன வசதிகள் மூலம் நிறைவாய் பயன்பெறலாம்' என்கிறார் விக்னேஷ்.

பதிவின் இருப்பிட அஞ்சல் குறியீட்டின் அடிப்படையில், அருகாமை பதிவுகளை தமிழ், ஆங்கில மொழிகளில் இச்செயலி காட்சிப்படுத்துகிறது; விற்பனை நிறைவுற்றதை, 'நோட்டிபிகேஷன்' முறையில் அறிந்ததும் பதிவு நீக்கப்படுகிறது; இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

நேற்று இன்று நாளை

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்ச கத்தின் 'டைட் 2.0' திட்டத்தின் கீழ், 3.5 லட்சம் ரூபாய் வெகுமதி 2024ல் கிடைத்தது. 2025ல் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின், 'ஆர்.கே.வி.ஒய். ரப்டார்' எனும் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பல்வேறு பிராந்திய மொழிகளில் இச்செயலியை விரிவாக்கவும், செல்லப்பிராணிகள், வண்ண மீன்களை எங்கள் சந்தை பட்டியலில் இணைக்கவும் கனவு இருக்கிறது.

வாழ்த்துகள் விக்னேஷ்.70105 94909

மனதில் இருந்து

'கால்நடைகள் குறித்த எந்த புரிதலுமற்ற எனக்கு இந்த 'டிஜிட்டல் சந்தை' ஒரு வரப்பிரசாதம். ஆடு, மாடு, கோழி வர்த்தகம் இதன் மூலம் வெளிப்படை தன்மையுடனும் லாபம் தருவதுமாகவும் நிக ழ்வதை உண ர்கிறேன்!'

செ.ராஜேந்திரன் பயனாளி திருச்சி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us