PUBLISHED ON : ஜூலை 19, 2026

கும்மிருட்டில் தேடப்படும் நீதி
நேர்மையான வழக்கறிஞரான அர்ஜுன் மெஹ்ரா, தன் மகளின் உயிர் காக்க, கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்படும் பணக்கார வீட்டு வாரிசான சவுர்யமான் கவுருக்காக வாதாடுகிறார். வழக்கறிஞர் - தனி மனிதர்; அவர் யாராக ஜெயிக்கிறார், யாராக தோற்கிறார்?
வாத திறமையால் எளியவர்களுக்கு நீதி பெற்றுத்தரும் வெள்ளித்திரை 'கறுப்பு அங்கி' நாயகர்களுக்கு மத்தியில், இந்நாயகனுக்கு திரைக் கதை அளித்திருக்கும் சவால் வித்தியாசமானது; குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞராக வாதாடவும் வேண்டும்; அதேவேளையில் நீதியை கண்டெடுக்க வேண்டும்! - இச் ச வாலில் அற்புதமாக வென்றி ருக்கிறார் சன்னி தியோல்.
அலங்கார மின்விளக்குகளின் அதீத வெளிச்சத்தில் பவுசாக மின்னும் நீதிமன்ற காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன; அரசு தரப்பு வழக்கறிஞரான மதுரா பானர்ஜி - அர்ஜுன் இடையிலான வாத உரசல்கள், ஒருமுறை கூட குப்பென்று பெருநெருப்பாய் பற்றிக் கொள்ளவில்லை; குறைகள்தான்... ஆனாலும் சன்னி தியோல், அக் ஷய் கன்னா உள்ளிட்ட அனுபவ நடிகர்களின் நடிப்பு இவற்றை மறக்கச் செய்கிறது!
தன்னால் பயன்படுத்த இயலாத சாட்சியை அரசு தரப்பு வழக்கறிஞருக்கு பயன்பட வைத்து, அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அர்ஜுனின் சாதுர்யம் கைதட்ட வைக்கிறது; அடுத்தடுத்த நிகழ்வுகளில், 'அது தனது சாதுர்யத்தால் நிகழவில்லை' என்பதை உணர்ந்து செயலாற்றும் விதமோ விசிலடிக்க வைக்கிறது.
சவுர்யமான் குறித்த மர்மத்தை இறுதிவரை காப்பாற்றி வந்த இயக்குனர், மர்ம முடிச்சுகளை அவிழ்க்கையில் சற்று சொதப்பி இருக்கிறார். மகளை காப்பாற்றியபின் எந்த சவாலும் இல்லாத சூழலில் அர்ஜுன் தன் திறமையை காட்டுவதெல்லாம்... பல்லற்ற பாம்பை பிடிக்கும் 'பொம்மை' சாகசம்!
'நகம் கடிக்க வைக்கும் பரபரப்பு இல்லை' எனினும், 'இந்த கதையின் முடிவு என்னவாக இருக்கும்' எனும் எதிர் பார்ப்பை நீட்டித்து ஜெயித்திருக்கிறது இக்கா .
ஆக...
சூர்யாவின் கருப்பு பார்த்து மனம் கருகியிருந்த 'கோர்ட் ரூம் டிராமா' ரசிகர்களுக்கு இப்படம் ஆறுதல்
