
விறுவிறு... நறநற... கர
முதல்ல இந்த 'விறுவிறு'வுக்கு விளக்கம்; முதல் காட்சி... ராத்திரி நேரம் மரத்து மேல இருந்து கீழே குதிக்கிற கரசாமி, ஒரு வீட்டுல களவாடப் போறாப்ல; அந்த இருட்டும், 'கர' செய்யப்போற வேலையும் 'என்னவோ நடக்கப் போகுது'ன்னு தோண வைக்குது. நாம நினைச்சமாதிரியே ' விறுவிறு' சம்பவம் நடக்குது!
இப்போ, 'நறநற'க்கு விளக்கம்; இந்தா, மேல சொன்ன 'விறுவிறு'வை விடாம 'க்ளைமாக்ஸ்' வரைக்கும் ராத்திரி, பகல்னு மாறி மாறி வறட்டு வறட்டுன்னு இழுத்துட்டு வந்தா, 'நறநற'ன்னு பல்லை கடிக்கத் தோணுமா... தோணாதா?
கடனை அடைக்க முடியாத விவசாயிகளுக்கு, கடன் கொடுத்த வங்கியை கொள்ளையடிச்சு உதவி செய்றவன் பேரு 'கர சாமி'யாம்; சுருக்கமா கர; இதுக்கு, 'ஜெயக் கடா'ன்னு இன்னும் லட்சணமா பேர் வைச்சிருக்கலாம்! இடைவேளை வரைக்கும் மூணு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கிறதுக்கு அந்த முக்கு முக்குறாப்ல தனுஷ்; இட்லி கடை வைச்சப்போ கழுத்துல போட்ட துண்டை வைச்சு இதுல முகத்தை மறைச்சுக்கிறது 'ஒப்பனை' வித்தியாசம்! பேங்க் மானேஜரா வர்ற ஜெயராம், செத்துப் போறதுக்கு முன்னாடி ஒரு நடிப்பு நடிக்கிறாப்ல... அய்யா கரசாமி... அவரு காமெடியனா... வில்லனாய்யா?
'தமிழ்ல நல்ல படம் பார்த்து நாளாச்சுப்பா'ன்னு நாம காய்ஞ்சு கிடக்கிறதால, ஒளிப்பதிவு தோள்ல ஏறி தடதடன்னு ஓடுற திரைக்கதைக்கு கைதட்டத் தோணுது. சும்மா சொல்லக்கூடாது... 'கோடை மழை' மாதிரி ஒளிப்பதிவு ரம்மிய மாத்தான் இருக்கு!
கரசாமிக்கு அலங்காரம் பண்ணி ஹீரோ ஆக்குறதுக்காக சூரஜ் வெஞ்சரமூடு, மமிதா பைஜு பாத்திரங்களை அலங்கோலம் பண்ணி வைச்சிருக்கார் இயக்குனர்; அதுவும், கொள்ளைக்கார கரசாமியை கைது பண்ணாம போறதுக்கு சூரஜ் சொல்ற காரணம்...
'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்னு வந்துச்சே... அதெல்லாம் ஒரு தமாசாப்பா'ன்னு கேட்குது.
ஆக...
கரசாமி கொள்ளை அடிக்கிறார்; நான் கைதட்டுகிறேன்; நான் என்னவாக மாறி வருகிறேன்?

