
பெரும்பான்மை தடகள வீரர்களின் தேர்வாக இல்லாத 110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டமே இந்த தனுஷ் ஆதித்தனின் விருப்பம்.
இதில், 14.1 2 வினாடிகள் என்கிற இவரது கோவை பாரதியார் பல்கலை அளவிலான சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது!
முதல் வினாடியில் இருந்தே உச்ச வேகத்தில் ஓடி, இடையிடையே வைக்கப்பட்டிருக்கும் 1.06 மீட்டர் உயரமுள்ள பத்து தடுப்புகளிலும் எகிறி குதித்து, 110 மீட்டர் எல்லையைத் தொட இடுப்பு, தொடை, தோள்பகுதி தசைகளை ஆண்டு முழுக்க பழக்கப்படுத்தி இருந்தால் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்!
இந்த கில்லியின் வரலாறு
'என் ஆறு வயசுல அப்பா இறந்துட்டார். 18 வயசுல மேட்டுப்பா ளையம் கிழங்கு மைதானத்துல காய்கறி மூட்டை துாக்கினேன்!
'என் ஊட்டச்சத்துக்கான செலவை ஏத்துக்கிட்ட பள்ளி ஆசிரியர்கள், போன வருஷம்
மேற்கு ரயில்வேயில் பணி கிடைக்குற வரைக்கும் 'ஸ்பான்சர்' பண்ணின டாக்டர்
மகேஸ்வரன், என் பயிற்சியாளர் சுரேஷ் சார்... இவங்க இல்லேன்னோ நான் இல்லை!'
தனுஷின் டாப் மூன்று பதக்கங்கள்
* 2022 ல் வெண்கலம் அனைத்திந்திய பல்கலைக்கழக தடகளம்
* 2023 ல் வெண்கலம் தேசிய தடகள சாம்பியன்ஷிப்
* 2022 மற்றும் 2023 ல் தங்கம் மாநில அளவிலான போட்டிகள்
'கில்லி' யின் சபதம்
'சர்வதேச சாதனையான 12.80 வினாடியை நான் முறியடிப்பேன்!'

