sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 04, 2026 ,சித்திரை 21, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

கில்லி

/

கில்லி

கில்லி

கில்லி


PUBLISHED ON : மே 03, 2026

Google News

PUBLISHED ON : மே 03, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்., பட்டி கோபால் நகரில் வசிக்கும் 82 வயது சுப்பிரமணி, தமிழகத்தில் இருக்கும் சொற்பமான மூத்தோர் தடகள வீரர்களுள் ஒருவர்!

இது, 20 வயது சுப்பிரமணி உடற்கல்வி ஆசிரியரான கதை...

'ரேடார் ஆப்பரேட்டர்' பணிக்கு தேர்வாகி, 1964ல் இந்திய விமானப்படை பயிற்சியில சேர்ந்துட்டேன். நாட்டம் முழுக்க உடற்கல்வி படிப்பு மேல இருக்குறப்போ, பயிற்சியில எப்படி ஈடுபாடு வரும்?

ஆறே மாதம்... வெளியில வந்துட்டேன். இங்கே சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற் கல்வி கல்லுாரியில இடம் கிடைச்சது. நல்லபடியா படிப்பு முடிச்சு அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆயிட்டேன்!

'விளையாட்டுல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டுங்கிற நம்பிக்கையை அவங்க அப்பா, அம்மாவுக்கு ஏற்படுத்தணும்'னு எனக்கு ஒரு கனவு; 29 ஆண்டுகால பணியில அந்த கனவை நிறைவேத்திட்டேன்!

உண்மை; அய்யா சுப்பிர மணியின் மாணவர்களில் பலர் இன்று, அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள். சிலர் ராணுவத்தில் பணியாற்று கின்றனர். மாணவியரில் பலர் தமிழக காவல் துறையில் பணிபுரிய, அவர்களில் ஒருவர் டி.எஸ்.பி., ஆக ஜொலிக்கிறார்.

பணியில் திருப்தி தந்த நாட்களாக எதனைச் சொல்வீர்கள்?

பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட விளையாட்டு நிதியை பயன் படுத்த முடியாத சில சூழல்கள்ல, என் சொந்த பணத்துல மாணவர்களை வெளியூர் போட்டிகளுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கேன்; பணி ஓய்வு நாள் வரைக்கும் முக்கிய போட்டிகள்ல கலந்துக்கிட்ட மாணவ, மாணவியருக்கு விருந்து பரிமாறி இருக்கேன்; இந்த நாட்களை அப்பப்போ நினைச்சுப் பார்க்கிறதுண்டு!

மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் தனது 70வது வயதில் பங்கேற்கத் துவங்கிய சுப்பிரமணியின் வெற்றிப் பதக்கங்களில் சில...

* 75 வயது - மணிப்பூர் தேசிய போட்டி - கம்பு ஊன்றி தாண்டுதல் - தங்கம்

* 75 வயது - மலேசியா ஆசிய போட்டி - கம்பு ஊன்றி தாண்டுதல் - வெள்ளி

* 80 வயது - தாய்லாந்து ஆசிய போட்டி - வட்டு எறிதல் - வெண்கலம்

* 80 வயது - தாய்லாந்து ஆசிய போட்டி - உயரம் தாண்டுதல் - தங்கம்

* 81 வயது - சென்னை ஆசிய போட்டி - கம்பு ஊன்றி தாண்டுதல் - வெள்ளி

ஆகஸ்ட், 2026 'தென் கொரியா உலக சாம்பியன்ஷிப்' போட்டிகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சுப்பிர மணியிடம் இறுதியாக கேட்ட கேள்வி...

எங்களுக்கு ஒரு பாடம் நடத்த முடியுமா சார்?

எனக்கு 71 வயசுல இதய அறுவை சிகிச்சை நடந்தது; இன்னும் நான் இயங்குறேன்; உயிரோட இருக்குறதுக்கும் உயிர்ப்போட இயங்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு; புரிஞ்சுக்கோங்க!

'கில்லி'யின் வேண்டுகோள்...

'மூத்தோர் தடகள வெற்றியாளர் களுக்கும் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்'






      Dinamalar
      Follow us