தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/கில்லி: கற்பூரமாகும் காயங்கள்

கில்லி: கற்பூரமாகும் காயங்கள்

கில்லி: கற்பூரமாகும் காயங்கள்


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மைதானமே கதி' என்று கைப் பந்துக்காக மதுரை ஜெயப்ரியா தன்னை அர்ப்பணித்துக் கொண்டபோது வயது 20; அது, 2022ம் ஆண்டு .

ஐந்து வயதில் தந்தை முனியசாமியை இழந்து, தாய் மலர்விழியின் கூலியில் வளர்ந்த இவரை 2023ல் துரதிருஷ்டம் தீண்டியது. ஒரு போட்டியில் தோள்பட்டையில் காயம்; தன் வளர்ச்சிக்கு அது தடையாகிவிடக் கூடாது என சிகிச்சையை தள்ளிப் போட்டபடியே இருந்திருக்கிறார்.

காயம் ஆட்டத்திறனை பாதித்த ஒரு சூழலில் அறுவை சிகிச்சை நிகழ்ந்திருக்கிறது; 'அடுத்த ஒன்பது மாதங்கள் கைப்பந்தை தொடக்கூடாது' என மருத்துவர்கள் அறிவுரை; ஆனாலும், நான்கு மாதத்தில் களத்திற்கு வந்த இவர் இதுவரை சாதித்தவை...

* மாநில அளவில் 50க்கும் மேற்பட்ட போட்டிகளிலும், சர்வதேச களத்தில் இந்திய பல்கலைக்கழக அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடி இருக்கிறார்

* பங்கேற்ற தேசிய அளவிலான போட்டிகள் - 23; இதில், 17 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல வெற்றிகளுக்கு காரணமாகி இருக்கிறார்

'கைப்பந்து ஆட்ட களத்தில் நான் 'லிப்ரோ' பொசிஷனில் விளையாடுவேன். எதிரணி சர்வீஸை எதிர்கொள்வது, எதிரணியினர் பந்தை 'பிளாக்' செய்கையில் பந்து எங்கள் பக்கம் விழுந்து விடாமல் தடுப்பது, பந்தை எகிறி அடிக்க வசதியாக துாக்கித் தருவது... இவை என் பொறுப்பு' எனச் சொல்லும் ஜெயப்ரியா, தற்போது தமிழக பெண்கள் சீனியர் கைப்பந்து அணியின் வீராங்கனை; மேற்கு ரயில்வே ஊழியர்.

இந்த 'கில்லி'யின் இலக்கு...

'இந்திய அணிக்காக நான் விளையாடணும்'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us