மிஸ்டர் மூளைக்காரன் ‘பழக்கடை’ மூர்த்தியும் ‘விசில்’ இளைஞனும்
மிஸ்டர் மூளைக்காரன் ‘பழக்கடை’ மூர்த்தியும் ‘விசில்’ இளைஞனும்
PUBLISHED ON : அக் 25, 2026

‘நாளிதழ்’ வாசிக்கிற தம்பி... மூர்த்தி அண்ணே என்னய்யா சொல்றாரு?
‘டெங்கு’ தடுப்பூசியை தென்காசி மாவட்டம் கடையநல்லுார் மக்களை வைச்சு துவக்குறதா இந்த அரசு சொல்லுதே... எதிர்காலத்துல, இந்த ஊசி தமிழகம் முழுக்க பயன்பாட்டுக்கு வருமா; ஏன்னா, ‘கருப்பை வாய் புற்றுநோய்’ தடுப்பூசியை நான்கு மாவட்டங்கள்ல இருந்து ஜனவரி, 2026ல் தி.மு.க., அரசு துவக்குச்சு; ஆனா, இன்னும் அது தமிழகம் முழுக்க பயன் பாட்டுக்கு வரலை; காரணம்... மக்களோட தயக்கமாம்!
‘இந்த தயக்கம் போக்க, இம்மாதிரி திட்டங்களை தங்களோட குடும்ப உறுப்பினர்களை முதல் பயனாளி ஆக்கி துவக்கி வைக்கிறதுல அதிகார வர்க்கத்துக்கு என்ன பயமோ... கடவுளுக்கே வெளிச்சம்’னு சொல்றாரு! சரிதானே?
தப்பு... நீ அவுட்டு; ஏங்க... அறிவுலகத்துக்குப் போற பெரியவரே... அந்த மூர்த்தி என்னங்க சொல்றாரு?
அதுவா... அது ஒண்ணுமில்லீங்க... ‘ஆயுத பூஜை லீவுக்கு சென்னையில இருந்து தத்தளிச்சு கிளம்புன பாதிபேரு, ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பாருங்க மக்களே... இடுப்பளவு தண்ணி நிற்குது’ன்னு ‘ரீல்ஸ்’ போட்டாங்களே தவிர, அது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைச்ச ‘கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்’னு பேரை சொல்லவே இல்லையே; ‘அது ஏன்’னு அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்’னு சொல்றாரு!
தப்பு... நீங்க சொன்னதும் தப்பு; அடேய்... ‘விசில்’ ஊதுறவனே... அந்த ‘பழக்கடை’ மூர்த்தி என்ன சொல்றாருன்னு உனக்காவது தெரியுமாடா?
ஏது... தெரியுமாவா; ‘இன்னைக்கு மார்ஸுக்கு ராக்கெட் விட்ட எலான் மஸ்கே ஒருகாலத்துல டிரைவரா இருந்தவர்தான்’னு வரலாறு சொல்றாருங்க; போதுமா?
சூப்பர்டா தம்பி; சரியா சொல்லிட்டே... நீ பெரிய புத்திசாலிடா!
இதென்னங்க பிரமாதம்... ‘விடியுறதுக்குள்ளே மழைநீர் வடிய காரணம் அரசு நிர்வாகம்’னு ‘பளிச்’ன்னு சொல்லுவேன்; விடிஞ்சும் மழை நீர் வடியலேன்னா, ‘அதிக மழை... மேக வெடிப்பு’ன்னு நானா புரிஞ்சுக்குவேன். ‘என்னை மாதிரியே சிந்திக்கணும்’னு என் மொத்த குடும்பத்தையும் நான் ‘டியூன்’ பண்ணி வைச்சிருக்கேன் தெரியுமா!
நல்ல ‘காரியம்’ பண்ணியிருக்கீங்க தம்பி; இந்தாங்க... ஜெயிலர் 2 டிக்கெட்.
‘நம்ம ‘பழக்கடை’ மூர்த்தி விரல் உயர்த்தி சொல்றது என்ன’ன்னு சரியா சொன்னா, ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்!
