தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.தி.மு.க., வழியில் மகிழ்மதி

'அமரேந்திர பாகுபலி' ஆகிய நான்...

'தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆட்சி நடைபெறவில்லை; காட்சிதான் நடைபெறு கிறது' என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சொன்னது தொடர்பாக, 'சிலரது முட்டாள்தனமான பேச்சுகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்; தி.மு.க., இனி ஆட்சிக்கு வரவே வராது; அது முடிஞ்சு போச்சு' எனும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் ஆவேச பேச்சை கேட்ட தருணத்தில்...

'ஆட்சியிலும், கழகத்திலும் பொறுப்பில் உள்ளவர்கள் கணக்கு காட்ட வேண்டும்' என்று, அக்டோபர் 8, 1972ல் எம்.ஜி.ஆர்., போர்க்குரல் எழுப்பிய போது, 'யாரோ ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகிக்கிறான் என ராமன் அனுப்பினான் சீதையை காட்டுக்கு! ராமன் அனுப்பலாம்... ராமச்சந்திரன் இப்படி கழகத்தை காட்டுக்கு அனுப்பத் துணியலாமா' என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நயமாய் கேட்டது கடுகளவும் நினைவிற்கு வரவில்லை என்றும்...

இலங்கை வவுனியா காட்டுப்பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தான் சந்திக்கச் செல்வதாக, அன்றைய முதல்வர் மு.கருணாநிதிக்கு தான் தெரியப்படுத்தி இருந்த பிப்ரவரி 5, 1989 தேதியிட்ட கடிதத்தில், 'தொண்டைக் குழியில் ஜீவன் இருக்கும்வரை தங்கள் புகழையே என் உதடுகள் உச்சரிக்கும்' என்று வைகோ உருகி இருந்ததை சத்தியமாக எண்ணிப் பார்க்க வில்லை என்றும்...

'அரசியலில் உணர்ச்சிவசப்படுதல் நல்லதல்ல' என்று, அக்டோபர் 26, 1993ல் திருவாரூர், குடவாசல் கூட்டத்தில் 'பகுத்தறிவு' ததும்ப ஆவேசமாக பேசி, 'கொலைகாரன் என்று பழி சுமத்தினால்தான் வைகோவை அழிக்க முடியும் என்ற ஆழமான சிந்தனை கருணாநிதியைத் தவிர யாருக்கும் வராது' என்று 'உணர்ச்சிவசப்பட்டு' வைகோ குமுறினாரே... அதை சற்றும் நினைவூட்டிப் பார்க்கவில்லை என்றும்...

'ஆளுமைத்திறனுடன் தமிழக வளர்ச்சிக்கு பாடுபடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்' என்று, ஜூன் 22, 2025ல் ம.தி.மு.க.,வின் 31வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பேசியதையும், அன்றே, 'கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ம.தி.மு.க.,வை ஒப்பிடக்கூடாது; அவர்கள் தினம் ஒரு கருத்து சொல்லி பின் அதை மாற்றுவர்' என்று அவர் பேட்டி அளித்தது பற்றியும் துளிகூட சிந்திக்கவில்லை என்றும்...



'இனி என் வழி வைகோ வழி' என்றும், ராஜமாதா சிவகாமி தேவி சாட்சியாக இன்று பிரமாணம் செய்கிறேன்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us