தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/முதல்வரே... நன்றி

முதல்வரே... நன்றி

முதல்வரே... நன்றி


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர் சொன்னது முதல்வர் செய்தார்

* செய்தி: சாலை விபத்தில் மூதாட்டியின் எலும்பு முறிவு; 'முதல்வர் விபத்து நிவாரண நிதி'க்காக இரண்டு ஆண்டு தவம்!

நவம்பர் 15, 2026ல், நமது 'முதல்வரே...ஒரு நிமிஷம்' பகுதியில்... திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் செப்டம்பர் 24, 2024ல் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் தன் மீது மோதியதையும், வலது தோள்பட்டை எலும்பு முறிந்ததையும், சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவான நிலையில், 'முதலமைச்சர் விபத்து நிவாரண நிதி' பெற இரண்டு ஆண்டுகளாக காத்திருப்பதையும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார் 83 வயது சங்கரம்மாள்.



இச்செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள்...


*அரசு நடவடிக்கை: செய்தி வெளியான கடந்த ஞாயிறு காலை 11:00 மணி அளவில், திருநெல்வேலி ஆட்சியர் ஆனந்த் மோகன், சங்கரம்மாளை தொடர்பு கொண்டு 'தங்களுக்கான 'முதல்வர் விபத்து நிவாரண நிதி' விரைவில் வரவாகி விடும்' என்று உறுதி அளித்திருக்கிறார். சொன்னபடியே அன்று மாலை 6:00 மணியளவில், 'முதலமைச்சர் விபத்து நிவாரண நிதி'யான ரூ.50 ஆயிரம் சங்கரம்மாளின் வங்கி கணக்கில் வரவானது.

ஆம்... வயது முதிர்ந்த ஒரு தாயின் இரண்டாண்டு காத்திருப்புக்கு ஒரேநாளில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் அரசு.



*சங்கரம்மாளின் நன்றி: 'அன்பு மகன் ஜோசப் விஜய்க்கு...' என்றழைத்து, என் காத்திருப்பின் துயரத்தை சொன்னதற்கு, ஒரு மகனாய் இருந்து கடமை நிறைவேற்றி இருக்கிறாய்; தமிழக முதல்வரே... என் மகனே... நீ நீடூழி வாழ வேண்டுமய்யா; உன் ஆட்சியில் தமிழகம் நிறை காண வேண்டும்; இதற்கு என் ஆசிர்வாதம்!

எங்கள் 'தினமலர்' நாளிதழே... நீயின்றி இது சாத்தியமில்லை; 'நன்றி' எனும் வார்த்தையன்றி என்னிடம் வேறு ஏதுமில்லை. எண்ணற்ற தடைகள் கடந்து மக்கள் நலனுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வருக்கு, இப்போது போல் எப்போதும் நீ உண்மை சொல்; மக்கள் என்றும் உன் பக்கம். மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us