PUBLISHED ON : அக் 11, 2026

மனசாட்சியை உலுக்கும் படைப்பு
'காதலை நீ ஏற்க மறுத்ததால அனிகேத் தற்கொலை பண்ணிக்கிட்டான்; அதுக்கு ந ீ தான் பொறுப்புன்னு சொல்றாங்க. ஒருவேளை காதலை ஏற்காத கோபத்துல அவன் என்னை கொலை பண்ணியிருந்தா, அதுக்கும் நான்தான் பொறுப்பா?'
நீதிமன்றத்தில் இக்கேள்வியை பூஜா கேட்ட பிறகு, 'அனிகேத் விஷயத்தில் உ னது எல்லையை நீ தீர்க்கமாக வரையறை செய்திருக்க வேண்டும்' என்று நமக்குள் பிறந்திருந்த அறிவுரையை, குப்பை தொட்டிக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது!
'ஸ்கூல்ல பூஜா என் காதலை ஏத்துக்கலை; இதனால, எனக்கு மன அழுத்தமாகி நல்லா படிக்க முடியலை' - அரசு தரப்பு அழைத்து வந்த சாட்சி பூஜாவுக்கு எதிராக இப்படி பேச, 'ஏன்டி அப்படி பண்ணினே' என்று நமக்குள் ஒரு கேள்வி!
'மனஅழுத்தத்திற்கு சிகிச்சை தந்த டாக்டர் என்ன சொ ன்னாங்க' எனும் பூஜா தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு, 'நிராகரிப்பை ஏத்துக்கிட்டு பக்குவமா கடந்துவர சொன்னாங்க' என்கிறது எதிர்தரப்பு; நீதிபதியை ஒரு கணம் பார்த்து தன் இருக்கைக்கு திரும்பும் பூஜாவின் வழக்கறிஞர், சற்றுமுன் நமக்குள் எழுந்த கேள்விக்காக வருந்த வைக்கிறார்.
இப்படி பொதுபுத்தி பார்வையில் இருந்து நிறைய கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு 'நெத்தியடி' பதில்கள் தந்து, 'சமூக சீர் திருத்தம்' செய்ய முயன்றிருக்கிறது திரைக்கதை.
எதையும் கொடுக்கும் உயர் இடத்தில் ஆண்கள் இருப்பதாகவும், அதை பெறுகின்ற இடத்தில் பெண்கள் இருப்பதாகவும் கருதும் ஆணின் மனதில், காதலின் அர்த்தம் பிழையாக பதிந்திருக்கும் உளவியலை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவ்ஜோத் குலாட்டி.
சிறையில் பூஜா சந்திக்கும் அக்கொலைகார பெண் பாத்திரத்திற்கான அவசியம் விளங்காததும், துவக்கம் முதலே 'பூஜா ஆதரவு' நிலைப்பாட்டில் நீதிபதி நடந்து கொள்வதும் புரியாத புதிர்.
இப்படி குறைபாடுகள் இருப்பினு ம், நம் மனதில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது இப்படைப்பு.
ஆக...
வெறி பிடித்து அலையும் 'ஒருதலை காதல்' தற்குறிகளுக்கு இப்படம் மாமருந்து
