தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/பிரதம திருஷ்யா குற்றக்கார் (மலையாளம்)

பிரதம திருஷ்யா குற்றக்கார் (மலையாளம்)

பிரதம திருஷ்யா குற்றக்கார் (மலையாளம்)


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துரோணரை மிஞ்சும் ஏகலைவி

'சீறிப்பாயும் தோட்டா, தான் பயணித்து வந்த துப்பாக்கியின் பாதை தரும் உரசலால் தன் உடம்பில் ரேகை கொண்டிருக்கும்; அந்த ரேகை, அந்த துப்பாக்கி துப்பும் அத்தனை தோட்டாக்களிலும் ஒரேமாதிரியாகத் தான் இருக்கும்!' - திரைக்கதை வழியே விரியும் ஓர் ஆய்வு முடிவு இந்த உண்மையைச் சொல்கிறது!

கூடவே, 'குற்றம் நிகழ்த்தியதாக விசாரணை அதிகாரி தந்திருக்கும் தோட்டா, குற்றத் திற்கு காரணமாகச் சொல்லப்படும் துப்பாக்கியில் இருந்து பாய வில்லை' என அவரை அலற வைத்து, இவ் விசாரணைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கிறது!

தண்டிக்கப் படாத குற்ற வாளி விசாரணை அதிகாரியின் முன் நின்று 'சல்யூட்' அடிக்கிறார். அந்த மரியாதையைப் பார்த்ததும், 'இயக்குனர் ஷாஹத் நிலம்பூருக்கு நாம் ஒரு 'மோதிரம்' அணிவித்தால் என்ன' எனும் ஆசை எழுகிறது. செய்வதறியாது விரக்தியோடு, வியப்போடு நிற்கும் அந்த விசாரணை அதிகாரியிடம், 'விடுங்க சார்... அடுத்த பாகத்துல பார்த்துக்கலாம்' என்று சொல்லி, அவர் கரம் பிடித்து நம் கண்ணில் ஒற்றி, இரண்டடி பின்நகர்ந்து அழுத்தமாய் ஒரு 'சல்யூட்' வைக்கத் தோன்றுகிறது!

இரண்டு மணி நேரம் 40 நிமிடம்; அப்படி இப்படி அசையவிடாமல் நம்மை கட்டிப் போடும் திரைக்கதையில், திட்டமிட்டு நிகழும் பல கொலைகள்; 'அவற்றை கடந்துவிட்டு இவற்றை கவனி' என அரங்கேறும் திட்டமிடாத இரு கொலைகள்; பதறும் கொலையாளிகளில் ஒருவர் கத்திக்குத்தில் சரிய, சிக்காமல் சிறகடிக்க விரும்பும் நபர் தன் மூளை பிழிந்து ஆடும் அறிவாட்டமே மொத்த கதை!

நேபாள வெள்ளக் காட்சிகளில்... வெள்ளத்தின் வேகத்தை மட்டுமே பார்த்த கண்களுக்கும், 'சீறும் வெள்ளம் யாரை விழுங்கப் போகிறது' என தப்பி ஓடும் நபர்களின் மீது கவனம் குவித்த கண் களுக்கும், 'மிதப்பது மனித இரைதான்' எனக் கூர்ந்து கண்டறிந்த கண்களுக்கும், 'துரோணர், ஏகலைவி' அடையாளம் புரியும்; படம் ரொம்ப ரொம்ப பிடிக்கு ம்.

ஆக...

வெள்ளம் சூழ்ந்த நேபாளத்தின் பச்சை வண்ண வீட்டில் இருந்தோர் மனநிலை உணர்த்தும் திக்... திக்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us