PUBLISHED ON : செப் 06, 2026

அனைவருக்கும் 'மன்மத' வணக்கம்
ஊரின் கிழக்குப் பகுதியில் 'ராஜன்' கால்வாய்; மேற்கில் 'கான்சாகிப்'
கால்வாய்; 1,000 அடியில் நிலத்தடி நீர்; 1,000 குடும்பங்கள் வசிக்கும் இக்
கிராமத்தில் ஒருபோக விவசாயம்! சிதம்பரம் - காட்டுமன்னார் கோவில் சாலையின்
13 வது கி.மீட்டரில் உள்ளது கடலுாரின் குமராட்சி கிராமம்.
இம்மண்ணில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் அரசுப்பள்ளியால், இங்கு பள்ளிக் கல்வி முடித்தவர்கள் அதிகம்; அதேபோல், பிளம்பர், பிட்டர், எலக்ட்ரீசியன்களும் அதிகம்! ஊர் முழுக்க கோவில்கள்; மூன்று இடங்களில் மன்மதனுக்கு கோவில்; இவற்றில், மாசி மாத 'காமன் பண்டிகை' மிகவும் பிரசித்தம்!
ஆங்கிலேயர் சர் ஆர்தர் காட்டனால, 1899ம் ஆண்டுல செங்கற்கள், சுண்ணாம்பு,
கடுக்காய், வெல்லம் கலந்து கட்டப்பட்ட நான், பல பேரிடர்களை கடந்து
நிற்கிறேன். ஆனாலும், 'கான்சாகிப்' கால்வாயை கடக்க மக்கள் புதிய பாலத்தை
தான் பயன்படுத்துறாங்க. இதனால, மது அருந்துற குடிமகன்களுக்கு மட்டும்தான்
இப்போ நான் நீளமான இருக்கையா பயன்படுறேன்!
எங்க ஊரு இளசுகள்
'ஊர் விஷயத்துக்கு எங்க இளைஞர்கள் ஒண்ணா கூடி நிற்குறதுலேயும், கிளை நுாலகத்தை பயன் படுத்துறதுலேயும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என்ன... கையில சிகரெட்டோட நிற்கிறப்போ, பெரியவங்க வந்தா அதை மறைக்காம, தைரியமா புகை விடுறானுங்க! அதேமாதிரி, எவனும் தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டேங்குறான்; போகட்டும்... அப்படி இப்படி இருந்தாலும், எங்க பயலுக அரசுகிட்டே விவரமா கேட்குறது என்ன தெரியுமா...
'எங்க புதன் சந்தைக்கு வர்ற 10 ஆயிரம் மக்களுக்காக கட்டின பொது கழிப்பறையை எப்போதான் பயன்பாட்டுக்கு தருவீங்க?'
