தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
அ நிறம் | அளவு

ஓம் சக்தி... ஓம் காளி...

'அரிஜனங்களின் ஆலயப்பிரவேசம் 'ஆலயத்தினுள் நிகழ்பவற்றை' அறிந்து கொள்ளவாவது நிகழட்டுமே' என்றவர் அண்ணாதுரை; 'செல்போன் கட்டுப்பாடு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும்' என்கிறார் அண்ணாமலை - இவ்விரு உண்மைகளின் 'தொடர்பை' மனதில் ஏந்தி, இடைத்தேர்தலில் ஓட்டு போடத் தயாராகி நிற்கும் மக்களே... இக்கேள்விகளுக்கு பதில் உண்டா?

1. 'ஓம் சக்தி' மந்திரத்தை 'அரசியல் பகடி'க்கு பயன்படுத்திய த.வெ.க.,வினரை ஹிந்துக்கள் சார்பில் கண்டிக்க வேண்டிய உதயநிதி ஸ்டாலின், 'ஓம் காளி...' என்று பதில் பகடி செய்வது, 'ஹிந்துக்களின் நண்பன் தி.மு.க.,' என்பதைச் சொல்கிறதா?

2. 'வீரமணி வழக் கு விசாரணை மின்னல் வேகத்தில் நிறைவுற்று, அவருக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்துவிடும்; அதன்பின், தமிழக சட்டம் ஒழுங்கு சீரடைந்து விடும்' எனும் நம்பிக்கையோடுதானே ஓட்டுச் சாவடிக்கு செல்வீர்கள்?

3. 'அரசியலில் 'துரோகம்' என்பது ஒன்றுமே இல்லை' எனும் பாடத்தை இடைத் தேர்தலில் த.வெ.க., வெற்றியின் மூலம் மக்கள் உணர்த்தினால், சிதறிக் கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க பழனிசாமி முன்வருவார்' என நம்புகிறீர்களா?

4. 'மோதிரமிட்டு அரசு மருத்துவ மனைக்கும், காலை உணவிட்டு அரசுப்பள்ளிக்கும் அழைக்கும் அரசுகள்... தரமான கல்வி, தரமான சிகிச்சைக்காக இந்த இடங்களை நாமாகவே நாடும் சூழலை எப்போது தரும்' எனும் ஏக்கம் எழுந்திருக்கி றதா?

5. 'குட்கா கடத்திய கா ரின் கூரையில் படுத்து கடத்தலை தடுத்த காவலர்' எனும் பரபரப்பு செய்தி, 'அன்று தமிழக சாலைகளில் அந்த ஒரு கடத்தல் மட்டுமே நிகழ இருந்தது; அதுவும் தடுக்கப்பட்டது' எனும் அர்த்தம் தந்ததா என்ன?

6. 'ரெண்டே ரெண்டு பேருக்குள்ளேதான் போட்டியே' எனும் த.வெ.க.,வினரின் தொடர் பிரசாரம், 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...' எனும் அர்த்தமுள்ள திருக்குறளை நீர்த்துப் போகச் செய்கிறது' என்றால் மறுப்பீர்களா?

7. 'தமிழகத்தை சீரழிக்கும் அந்த தீயசக்தி ஒழிக்கப்பட வேண்டும்' என்றும், 'தி.மு.க., அருமையான இயக்கம்' என்றும், 60 வினாடிக்குள் அந்நியனாகவும், அம்பியாகவும் மாறி மாறி அசத்திய துரை வைகோவின் பிரசாரம் நினைவில் இருக்கிறதுதானே?

7 ½ 'இடைத்தேர்தல் 2026' - பரிதாபமா... பரிகாரமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us