PUBLISHED ON : மே 31, 2026

தோல்வி, 'வெற்றி' ஆகிறது வெற்றி, 'தோல்வி' ஆகிறது
'அவன் குற்றம் செய்தானா... இல்லையா என்பது இருக்கட்டும்; அவன் குற்றத்தை நிரூபிக்க உன்னிடம் சாட்சி, ஆதாரம் இருக்கிறதா... இல்லையா' - நீதிமன்றங்கள் கேட்கும் இக்கேள்வி சரியா... தவறா?
'இன்று 'குற்றவாளி' என தீர்ப்பு சொல்லப்பட்டு சிறைகளில் இருக்கும் நபர்கள் குற்றத்தில் ஈடு பட்டவர்களா அல்லது வலுவான சாட்சிகளின் அடிப்படையில் 'குற்றவாளிகள்' எனும் முத்திரை பெற்றவர்களா?
'குற்றம் செய்யாது தண்டனை அனுபவிப்பவர் சிறைகளில் இல்லை' என்றோ, 'குற்றம் செய்துவிட்டு வெளியில் சுதந்திரமாக உலவுபவர் யாரும் இல்லை' என்றோ நீதிமன்றங்களால் இன்று சொல்ல இயலுமா?
இப்படியான கேள்விகளை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பேற்றிருக்கும் இப்படைப்பின் க்ளைமாக்ஸ், ஏற்றுக்கொண்ட தன் கடமையில் நாம் 'விசில்' அடிக்கும் வகையில் ஜெயித்திருக்கிறது!
அரசு பெண் வழக்கறிஞருக்கு தன் அறிவுக் கூர்மையினால் உதவும் பாத்திரத்தில் ஜோதிகா; வழக்கம்போல 'நடிப்பு ராட்சசி'யாக ஜொலிக்க, அவரோடு போட்டியிட முடியாத அளவில் சோனாக் ஷி சின்ஹா; ஆனாலும், ஜோதிகாவால் பாராட்டப்படும் இறுதிக்காட்சியில் கண்ணீர் விழிகளோடும், துடிக்கும் உதடுகளோடும் ஜோவின் நடிப்பு உயரத்திற்கு எம்பியிருக்கிறார்!
'குற்றம் சாட்டப்பட்டவன் செய்ததாகச் சொல்லப் படும் குற்றத்தை சுற்றிதான் அரசு தரப்பு ஆராயுமே தவிர, அக்குற்றம் நிகழ்வதற்காக அவன் செய்யாது தவிர்த்த குற்றத்தை அவ்வளவாக ஆராயாது' என, துவக்கத்தில் ஜோதிகாவை அர்த்தமாய் பேச வைக்கும் திரைக்கதை, அதற்குப்பின் அவரைச் சுற்றியே வலம் வருவதற்கான காரண பொட்டலத்தை 'க்ளைமாக்ஸ்' பிரிக்கிறது; 'கண்கட்டு கொண்ட பழைய நீதிதேவதையின் சிலை நம் நினைவிற்கு வருகிறது!
தீர்ப்பு சொல்லும் நீதிபதி அறியாது தனக்கான நீதியை நீதிமன்றத்தில் பெறும் ஒரு அறி வார்ந்த ஜீவனின் வாழ்க்கையே சில 'லாஜிக்' ஓட்டைகள் கொண்ட இக்கதை.
ஆக...
பதவி அதிகாரமும் தந்து பணி செய்ய ஆறு மாத அவகாசமும் தரும் மனிதருள் மாணிக்கங்களுக்கு இப்படம் புளிக்கும்
