PUBLISHED ON : மே 24, 2026

என்ன ஜார்ஜ்குட்டி... ரொம்ப அசந்துட்டியா?
இரண்டு தடவை செஞ்சமாதிரி இந்ததடவையும் ஏதாவது பெருசா செய்வேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தேன்யா; நீயும் ஏதோ பெருசா செய்யப்போற மாதிரி 'க்ளைமாக்ஸ்' வரைக்கும் உன் ஜீத்து ஜோசப்பு என்னை நம்ப வைச்சிட்டே இருந்தாப்ல!
அழகி படத்துல 'ஒளியிலே தெரிவது தேவதையா...' பாட்டை பத்த வைக்கிற காட்சிக்கு அப்புறம், வத்திக்குச்சி வெளிச்சத்துல நான் ஒரு முகம் பார்த்தது இந்த கதையிலதான்; என்ன... அதுல தெரிஞ்ச முகம்... அழகி; இது... ஆத்தி! இந்த காட்சிக்கு முன்னாடி, கொடியில கிடக்குற துணி எடுக்க உன் பெரிய பொண்ணு பின் வாசலுக்குப் போச்சு பாரு... அப்போ நடக்குற சம்பவத்துல முட்டின சுச்சூ, என்னை எழுந்திருக்க வைச்சது இந்த காட்சியி ல தான்; சரியா நீ 'இடை வேளை' விட்டதுக்கு 'ஈரமான' நன்றி!
ப்ப்ச்ச்ச்... 'ராத்திரி டிபனுக்கு என்ன செய்றது'ன்னு புருஷன்கிட்டேயும், புள்ளைங்க கிட்டேயும் கேட்டு சரியான பதில் வராம வெறுத்துப் போன சம்சாரம் கிண்டுற 'உப்புமா' மாதிரி, 'க்ளைமாக்ஸ்'ல இப்படி 'மின்சாரம்' பாய்ச்சிட்டியே ஜார்ஜ்குட்டி! கடைசி அரைமணி நேரம் உன்னை மாதிரியே எனக்கும் 'போதும்டா சாமி'ன்னு ஆயிருச்சு!
'இந்த கருமத்தைதான் ராத்திரி பூரா கிடந்து ஒட்டிக்கிட்டு இருந்தியாக்கும்'னு, துாள் படத்துல பரவை முனியம்மா பாட்டி சில உருப்படிகளை எத்தி விட்டுப் போகுமே... அந்தமாதிரிதான் இருந்துச்சு ஜீத்து ஒட்டி வைச்சிருந்த திரைக்கதை; 'தப்பு பண்ணிட்டோமோன்னு இந்த பாகத்துல உனக்கு குற்றவுணர்ச்சி உண்டாக்கணும்; அதை உருவாக்குறது யார், என்னென்ன சம்பவங்கள்'னு யோசிச்ச ஜீத்து, உன் குடும்பத்தை நீயே நாசம் பண்றமாதிரி முடிவு சொன்னப்போ, நீ எப்படி ஒத்துக்கிட்டே ஜார்ஜ்குட்டி?
எனக்கென்னவோ... உன் முடிவுக்கு நீயே 'விசில்' ஊதிக்கிட்ட மாதிரிதான் தோணுது; போதும்... திரும்பி வந்துராதே... திகட்டிருச்சு; ஆனாலும்... மிஸ் யூ.
ஆக...
'ம்ம்ம்... ம்ம்ம்... ' என 'ஜொள்' வடிக்கும் மிஸஸ் ஜார்ஜ்குட்டி ரசிகர்களுக்கும் இதில் பெருத்த 'ம்ஹும்...
