தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/துாமகேது (மலையாளம்)

துாமகேது (மலையாளம்)

துாமகேது (மலையாளம்)


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தான், சுட்டான், செத்தான்... ரிப்பீட்டு

மாநாடு படத்தில் சிம்புவுக்கு நிகழ்ந்தது, சிறு மாற்றத்துடன் இதில் குட்டனுக்கு நிகழ்கிறது. முதலிரவில் மனைவியை தொடும்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் முகமூடி கும்பல், குட்டனை கொன்று, அவன் மனைவி ஷர்மிளாவை கடத்திச் செல்ல, திருமண நாளின் காலை நேரத்தில் மீண்டும் மீண்டும் கண் விழிக்கிறான் குட்டன்; இந்நிகழ்வுக்கு என்ன காரணம்?

'இந்த வயசுல இவன் மூஞ்சிக்கு இவ்வளவு அழகான மனைவியா' என்று, ஊரார் பொறாமையும் நக்கலும் செய்யும் நிலையில் குட்டனின் வாழ்க்கை. 'இப்படியானவன் தன் மனைவியை தொடும் தருணங்களில் எல்லாம் இறக்கிறான்' எனும் கலகலப்பான புள்ளியை மையமாக்கி வட்டம் அடிக்கிறது திரைக்கதை!

மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரே காட்சியை அலுப்பு தட்டாமல் ரசிக்க வைக்கிறது விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு. குட்டனுக்கு நிகழும் பிரச்னையின் வேர் பகுதிக்கு கதை நகர்ந்ததும், அதுவரை இருந்த சுவாரஸ்யம் சட்டென்று சுண்டிப் போவது ஏமாற்றம். இதற்கொரு வலுவான பின்னணியை இயக்குனர் சுதி மேடிசன் உருவாக்கி இருந்தால் 'சபாஷ்' சொல்லி இருக்கலாம்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியை கடக்கும் வால்நட்சத்திரம், குட்டனின் தாய் வணங்கும் கடவுள் முத்தப்பன் என 'டைம் லுாப்' சம்பவத்திற்கு தரும் விளக்கம் போதுமானதாக இல்லை. 'நிகிலா விமல் - சாஜின் கோபு' ஜோடி இடையிலான பிணைப்பும், குட்டனின் நண்பனாக வருபவரின் பங்களிப்பும் சேர்ந்து க்ளைமாக்ஸை காப்பாற்றுகின்றன.

'ரசிகர்களின் மூளைக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது' எனும் இயக்குனரின் எண்ணத்தால் குழப்பம் இல்லாது 120 நிமிடங்கள் கரைகின்றன. சிறப்பான திருப்புமுனை காட்சிகள், மீளவே முடியாத சிக்கலில் இருந்து மீளும் நாயகன் உள்ளிட்டவை திரைக்கதையில் இருந்திருப்பின், குட்டனின் 'டைம் லுாப்'பில் விரும்பி மாட்டிக்கொண்டு குதுாகலிக்கும் உணர்வு நமக்கும் எழுந்திருக்கும்.

@block_B@தமிழகத்தின் 'சட்டம் - ஒழுங்கு' செய்திகளை பிரதிபலிக்கிறது குட்டனின் 'டைம் லுாப்' வாழ்க்கை@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us