
சென்னை, ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் 'ஜர்னலிசம் அண்டு மாஸ்
கம்யூனிகேசன்' துறையின் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கொண்டாடும்
நாயகர்கள் திரை நட்சத்திரங்களா... அரசியல்வாதிகளா?
வெ.ஜஸ்வந்த் : 'இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் ஒருவரான 24 வயது ஐஸ்வர்யா ராமநாதன்; இவரது சகோதரி சுஷ்மிதா ராமநாதன், தன் 6வது முயற்சியில் ஐ.பி.எஸ்., வென்றவர். எளிய விவசாய குடும்பம், 2004ம் ஆண்டு சுனாமியில் வீட்டை பறிகொடுத்த துயரம்... இவற்றில் இருந்து மீண்டு சாதித்த இவர்களே என் வழிகாட்டிகள்!'
கா.சஷ்மிதா
'பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனும் தார்மீக சிந்தனையை என்னுள் புகுத்திய பேராசிரியை பர்வீன் சுல்தானா; பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை ஊசி குத்துவது போல் மாணவர் களுக்கு அவர் புரியவைக்கும் நயம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரே என் நாயகி!'
சு.பரத்குமார் 'ஏழ்மையால் சிறுவயதிலேயே சமையல் கரண்டி பிடித்த சாண்டர்ஸ், தன் 40 வயதில் துவக்கிய சாலையோர உணவகம் இன்று 150 நாடுகளில் ருசி மிகுந்த அடையாளம்; கே.எப்.சி., நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ்... என் தலைவர்; சிறு உணவகம் நடத்தும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஹீரோ இவர்!'

