தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ குரல் சொல்லும் குறள் கழுதை காதல் காசு தரும்

 குரல் சொல்லும் குறள் கழுதை காதல் காசு தரும்

 குரல் சொல்லும் குறள் கழுதை காதல் காசு தரும்


PUBLISHED ON : ஆக 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யார் குரல்?

பெயர்: ராஜு ஜோசப் வயது: 52 அடையாளம்: 'கழுதை பண்ணை' உரிமையாளர்

'பொதி சுமக்குற விலங்கா நமக்கு அறிமுகமாகி இருக்குற சாதுவான கழுதையை வைச்சு அப்போ ஏர் ஓட்டி விவசாயம் பார்த்திருக்காங்க தெரியுமா; இன்னைக்கு, இந்த இயற்கை விவசாயத்துல கழுதை கோமியம் பூச்சி விரட்டியாகவும், பயிர் ஊக்கியாகவும் இருக்கு!

'இந்தவகையில், காணாம போயிட்டு இருக்கிற கழுதை இனத்தை காப்பாத்தணும்னு விரும்பினேன். அதை ஓரளவு செஞ்சிருக்கிறேன்னு நம்புறேன்' எனச் சொல்லும் வழக்கறிஞர் ராஜு ஜோசப், திருச்சி, முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இப்பண்ணையை நடத்துகிறார்.

தொழிலுக்கு காரணம்

தென்காசி மாவட்டம் சொக்கம் பட்டி என் பூர்வீகம். என் சின்ன வயசுல, மந்தையில புரண்டு விளையாடி புழுதியை கிளப்பி கல்லெறி வாங்குற கழுதைகளைப் பார்த்து அனுதாபப்பட்டிருக்கேன். அதுகூட, இந்த பண்ணை அமைய ஒரு காரணமா இருந்திருக்கலாம்!

பண்ணை அமைக்க கழுதைகள் தேடி அலைந்த ராஜுவுக்கு, தென்மாவட்டங்களில் அங் கொன்றும் இங்கொன்றுமாக எட்டு மூப்பேறிய கழுதைகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கிடைக்க, அவற்றைக் கொண்டே 2018ல் இந்த பண்ணையை உருவாக்கி இருக்கிறார்.

வளர்ப்பும் வளர்ச்சியும்

என் கழுதைகளுக்கு ன்னு சிறப்பான கொட்டகைகள் இருக்கு. காலையிலேயும், சாயங்காலமும் மேய்ச்சலுக்கு கூட்டிட்டுப் போறேன். அப்புறம் பசுந்தீவனம், வைக் கோல், சோளத்தட்டைகளை உணவா தர்றேன். வாரத்துக்கு ஒரு நாள் நல்லா குளிப்பாட்டி விடுறேன். கழுதைங்க அடிக்கடி மாத்தி மாத்தி கடிச்சுக்கும்ங்கிறதால வருஷத்துக்கு ஒருதடவை 'ரேபிஸ்' தடுப்பூசி போட்டு விடுறேன்.

'ஐந்திணை பண்ணை'யில் கழுதைப்பால் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டு பவுடர், சோப், பாடி வாஷ் எனும் சரும பராமரிப்பு பொருட்களாகவும் விற்பனையாகிறது. சாணத்தில் இருந்து சாம்பி ராணியும், கழுதை முடிகள் கொண்ட தாயத்துகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்புகளுக்கு மாநில அரசின் அனுமதி பெறப்பட்டி ருக்கிறது.

அன்று கேலி இன்று...

நான் பண்ணை ஆரம்பிச்சு கழுதைகளை மேய்ச்சலுக்கு கூட்டிட்டுப் போறப்போ கேலி பேசுனவங்க எல்லாம், இன்னைக்கு கழுதை வளர்க்க ஆர்வமா இருக்குறாங்க. கேட்பார் இல்லாத கழுதைங்க மேல மத்திய அரசோட பார்வை விழுந்திருக்கிறதுல எனக்கு பெரும் சந்தோஷம்; ஆமா... 'கழுதை பண்ணை' அமைக்க மத்திய அரசு ரூ.50 லட்சம் வரைக்கும் மானியம் தருது!

வெறும் எட்டு கழுதைகளுடன் துவக்கப்பட்ட இப்பண்ணையில், தற்போது இரண்டு குஜராத் ஹலாரி கழுதைகள் உட்பட 25 கழுதைகள் உள்ளன. 'கழுதை வளர்ப்பின் மூலம் லாபம் ஈட்ட முடியும்' என்பதை நிரூபித்து இருக்கும் ராஜு, கழுதை வளர்ப்பு, மதிப் புக்கூட்டு பொருள் தயாரிப்பு குறித்து 'ஆன்லைன்/ நேரடி பயிற்சி வகுப்புகள்' நடத்துகிறார்.

'கழுதை மேய்ச்சாலும் நல்ல லாபம் பார்க்க முடியும்னு புரிய வைக்கிறதுதான் ' ஐந்திணை பண்ணை'யோட நோக்கம்!'

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று

பொருள் : ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

எண்: 678

குரல் சொல்லும் குறள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us