தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஜி.டி.என்.,

ஜி.டி.என்.,

ஜி.டி.என்.,


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலன் களவாடியவருக்கு கலையின் புகழஞ்சலி

'ஜி.டி. நாயுடுவை ஏன் நாம் கொண்டாட வேண்டும்' என்பதற்கான பதில் இப்படம். ஆனால், அவரை மையமாக வைத்து 'முதலாளி - தொழிலாளி உறவின் அவசிய புரிதல்' சொல்லவும், 'கணவன் - மனைவி பந்தத்தின் பெருமை' உணர்த்தவும், 'திறமை என்பது எது' என்பதை புரிந்து கொள்ளவும் முனைந்திருக்கும் திரைக்கதை, தன் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது!

'அனுபவம் வேறு, திறமை வேறு; அதையும் இதையும் ஒப்பிடவே கூடாது; முன்னது சமுத்திரம், பின் னது தேன் துளி' என்பதை, தன்னிடம் வேலைக்கு சேரவரும் தொழிலாளியின் திறமையை, முதல் அறிமுகத்திலேயே புரிந்துகொள்ளும்படி ஒரு தொழிலதிபர் பாத்திரம்; அவனையும் வளர்த்து, அவனது திறமையால் தன் தொழிலையும் வளர்க்கும் இப்பெண் பாத்திரத்திற்கு திரையில் இரண்டு நிமிட காட்சிதா ன்; ஆனால், நடத்தும் பாடமோ... பசுரமரத்தாணி!

'என்னால என் புருஷன் சாதிக்க முடியலையேன்னு நான் அழ, 'நம்ம கனவு நிறைவேறாம போச்சே'ன்னு நீங்க வருத்தப்பட...' - இப்படியாக மாதவனிடம் ப்ரியாமணி அன்பொழுக பேசுகையில், 'அழ' எனும் வார்த்தைக் கும், 'வருத்தப்பட' எனும் வார்த்தைக்குமான வித்தியாசம், அதனுள் ஒளிந்திருக்கும் மரியாதை, ஆத்மார்த்தமாக இல்லறம் அனுபவிக்கும் கணவன் - மனைவிக்கு எளிதாய் விளங்கும்... இனிக்கும்; மனைவி அருகிருப்பின் விரல்களை அன்பாய் பின்னிக்கொள்ளத் தோன்றும்!

காணும் எது ஒன்றிலும் அதன் காரணத்தை ஆராய்ந்து அறிவு பெருக்கும் நாயுடுவும், 'செய்யும் தொழிலே சுவாசம்' என வாழ்ந்து காட்டும் ராமைய்யா பிள்ளையின் திறமையை நாயுடு அங்கீகரிக்கும் விதமும், 'கேட்காது கடவுள் தரும் வரத்தை தவறவிடாது பெற்றுக்கொள்ளும் அற்புத நிகழ்வு' போல் சிலிர்ப்பூட்டுகிறது.

ஈ.வெ.ரா., உலவும் இக்கதையில் சத்யராஜ் பாத்திரம் குங்கும பொட்டோடு மின்னுவதும், 'கூத்தாடியை கொண்டாடுறீங்களேடா' என 'அன்றைய' இளம் தலைமுறையை ஜி.டி.என்., குட்டுவதும், 'நேர்மையான பாத்திரத்தில் ஜெயராம்' என்பதை அவரது 'நேர்த்தியான விருப்பம்' மூலம் புரிய வைப்பதும், 'பூப்பெய் திய ரோஜா'விற்கு இணையாய் பொங்கும் துஷாரா விஜயனின் அழகும்... இவ்வி ருந்தின் ருசியூட்டும் பிற பதார்த்தங்கள்.

ஆக....

எத்தனையோ ஆணவங்களை நேரலையில் ரசிக்கிறோம்; இந்த ஆளுமையை ரசித்து கொண்டாடலாமே

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us