தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஹாய் (தமிழ்)

ஹாய் (தமிழ்)

ஹாய் (தமிழ்)


PUBLISHED ON : ஆக 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவின் ஊறுகாயுடன் புளித்த தயிர் சாதம்

தயாரிப்பாளர் நயன்தாராவுக்கு என்ன பணக்கஷ்டமோ, பல காட்சிகளில் கந்தைகளை கசக்கி கட்டியிருக்கின்றனர். கவின் கண்ணீர் விடும் மொட்டை மாடி காட்சியின் பின்னணி விளம்பரம், 'கல்லா' கட்டியிருப்பதையும் சொல்கிறது!

கர்ப்பிணியாய் இருக்கும் மகள் நயன்தாராவுக்கு பிடிக்குமென, தானே கைப்பட சமைத்த பலகாரங்களை துணிக்கடை கட்டைப் பையில் அடுக்கி, நடிகர் பிரபுவை சுமந்து வரச்செய்த திரைக்கதை, அந்த கட்டைப்பையை உள்பக்கமாக பிதுக்கி கடையின் பெயர் வெளியே தெரிந்து விடாது கவனமாக செயல்பட்டிருக்கிறது.

இந்த அக்கறையிலும், அந்த பையில் இருப்பதாகச் சொல்லப்படும் பலகாரங்களில் ஒன்றைக்கூட வெளியில் எடுக்காமல் பிரபு உருட்டும் முரட்டு பாசத்திலும், அப்பட்டமாய் தெரிகிறது தயாரிப்பாளரின் 'தாராள' மனம்!

இந்த வறண்ட நிலத்தில் குறிஞ்சி மலரா பூக்கும்?

கவின் குடும்பத்து காட்சிகள் உட்பட அத்தனையும் துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்களில் நாம் பார்த்துப் பழகிய வீட்டில், அதே கேமரா கோணங்களில் வெறுப்பூட்டுகின்றன. காட்சியில் பங்களிக்கும் கதாபாத்திரங்களை அக்காட்சியில் இருந்து நாசூக்காக பிரித்தெடுக்கத் தெரியாமல், 'உங்களை அங்கே யாரோ தேடுறாங்க பாருங்க' எனச் சொல்லியே வெளியேற்றும் இயக்குனரின் கற்பனை வளம் அகம் சிலிர்க்க வைக்கிறது!

கவினுக்கு காதலிக்க பெண் இல்லை; நயன்தாராவை காதலி ஆக்குகிறது காலம்; காதல் கைகூடுவது கதை; இதை, என்னென்னவோ சொல்லி முடித்து வைக்கின்றனர். வெகுளியான அம்மா போல் ராதிகாவும், உணர்ச்சிவசப்பட்டு கண்பிழியும் அப்பாவாக பிரபுவும்... அய்யோ... இப்படி நடிக்கிறது உங்களுக்கே திகட்டலையா சாமி?

பட்டிமன்ற, சமூக வலைதள நகைச்சுவைகளை திரையில் வந்து கொட்ட, ஒரு பாடாவதி நண்பன் இங்கும் அலைகிறான். இத்தனை கொடுமைகளுக்கு மத்தியில் கவினின் நடிப்பு சற்று ரசிக்கும்படி இருக்கிறது; நல்ல கதைகளை தேர்ந்தெடுங்கள் கவின். போதும் நயன்தாரா... முதுமை உங்களை முந்திவிட்டது; ஏற்றுக்கொண்டு கலையால் அதற்கு கவுரவம் செய்யுங்கள்.

ஆக....

'என்னடா காதல் இது' - திரையரங்கின் ஒளிவிழாத ஓரத்து இருக்கையில் கிசுகிசுப்பாய் ஒரு கொஞ்சல் குரல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us