PUBLISHED ON : ஆக 23, 2026
சாவுக்கும் மேல பெரிய தண்டனை
நீங்க யாருக்காவது இதை கொடுக்கணும்னு நினைச்சா, சம்பந்தப்பட்ட காதுல போய் இப்படி ரகசியமா சொல்லுங்க... 'இந்த படம் ரொம்ப பிரமாதம்'
நம்பி போறவனுக்கு ஒரு கல்யாண வீட்டு ஆட்டம் பாட்டத்தை திரையில காமிப்பானுங்க; பயபுள்ள வசதியா சீட்ல சாய்ஞ்சு உட்காருவான். அடுத்த நிமிஷமே அந்த வீட்டுக்கு வர்ற அரசு அதிகாரிங்க, வீட்டுல இருக்குற ஒருத்தனை புடிச்சுட்டுப் போவாங்க. 'ஆஹா...'ன்னு நம்ம பயபுள்ள கால்மேல கால் போட்டுக்குவான்.
இப்ப லண்டன்ல இருக்குற பிருத்விராஜுக்கு, சரியான ஒரு சண்டையோட என்ட்ரி; 'என்னமோ நடக்கப் போகுது போல; நல்ல படத்துக்குதான் வந்திருக் கோம்'னு நம்மாளு உள்ளுக்குள்ளே சிரிப்பான். இப்போ, அந்த அதிகாரிங்ககிட்டே பிடிபட்டவன், 'நானும், பிருத்விராஜும் சேர்ந்து என்னென்ன செஞ்சிருக் கோம் தெரியுமா'ன்னு சொல்ல ஆரம்பிப்பான்.
இப்போ, நம்மாளு கால் மாத்தி கால் போட்டுக்குவான்; ஆனா, லேசா கண்ணை கட்டுற மாதிரி இருக்கும்! பின்னே... பிருத்விராஜும் தானும் சேர்ந்து தங்கம் கடத்துனதை அவன் அவ்வளவு கேவலமால்ல சொல்லுவான்; கடத்துனவிதம் அதைவிட மட்டமா இருக்கும்; இங்கே நம் மாளுக்கு, உட்கார்ந்து இருக்குற சீட்டுக்கு கீழே தீ பிடிச்சமாதிரி இருக்கும்; கால் ரெண்டையும் தொங்க போட்டு உட்காரத் தோணும்.
அங்கே திரையில, தங்கம் கடத்துற இவங்களுக்கு போட்டியா இருக்குற ஒரு தாடிக்காரன், தன் நண்பனோட மகனை பிருத்விராஜ் 'கரண்ட்' வைச்சு கருக்கிட்டதால கொலை வெறியோட சுத்திக்கிட்டு இருப்பான். பழிவாங்க அவன் திட்டம் போடுறப்போ, படம் பார்க்குற போஸுல நம்மாளு கண்டிப்பா துாங்கியிருப்பான்.
திடீர்னு ஒரு சண்டை சத்தம் கேட்கும்; நம்மாளு முழிச்சு அந்த சண்டையை முழுசா பார்த்தான்னா, கண்டிப்பா நெஞ்சு அடைக்கும். அப்படியே நெஞ்சை பிடிச்சு திணறிட்டு இருக்குறப்போ, பிருத்விராஜோட தாத்தாவா 'லாலேட்டன்' என்ட்ரி; அப்போ, அடுத்த சாவுக்காக, சாரி... அடுத்த 'ஷோவுக்காக' தியேட்டரை கூட்டிப் பெருக்க ரெடியா நிற்குறவரு முகத்துல சின்னதா ஒரு பல்பு எரியும்!
அந்த வெளிச்சத்துல படக்குன்னு எந்திரிச்சு ஓடிட்டா பொழைச்சான்; இல்ல... 'சங்கு'க்கு சொல்லிரலாம்.
ஆக..
அய்யா கேளுங்க... அம்மா கேளுங்க... நல்லா கேளுங்க... இந்த மலையாள படம் குப்பை
