தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மகுடம்

மகுடம்

மகுடம்


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஷால் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 எதிர்பார்ப்பவர்களே... பரமபிதா உங்களுக்கு துணை நிற்கட்டும்

இயக்குனராக முதல் முயற்சி; பல மசாலா படங்களின் சாயலில் இவரும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார்; நாயகனும் நாயகியும் காரில் செல்லும்போது, 'உன் கூட சந்தோஷமா வாழணும்' என நாயகி சொன்னதும், சட்டென நிகழும் விபத்தில் அவர் இறந்து போகிறார்; இப்படியான காட்சிகளின் தொகுப்பு இதன் திரைக்கதை!

'கேங்ஸ்டர்' தந்தையை வெறுத்து ஒதுக்கி குடும்ப வாழ்க்கை வாழும் மகன்; கேங்ஸ்டர் மீதான பகையில் மகன் குடும்பத்தை சிதைக்கும் எதிரிகள்; அப்பனின் நற் குணம் மகனுக்கு தெரியவருகையில் எதிரிகள் அப்பனை போட்டுத்தள்ள, அவரது கோட் சூட்டை மகன் போட்டுக் கொண்டு எதிரிகளை பழி தீர்க்கும் கதை.

இக்கதையின் இடை வெளிகளில் மீன் விற்கும் பெண்கள், கூலித்தொழிலாளிகள், பள்ளி சிறுவன் உள்ளிட்டோர், 'நீங்க சாமி மாதிரி; நீங்க பண்ணின உதவிக்கு நன்றி' என விஷாலுக்கு வெறித்தனமாய் வாழ்த்து சொல் கின்றனர். ம்ஹும்... இந்தமாதிரி இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்குதோ!

பதற்றமெனில் கால்கள் நடுங்க வைப்பது, துயரத்தில் 'அய்யோ' என கதறி அழுவது உள்ளிட்ட தனக்கு கைவரும் நடிப்புகளை இதிலும் படையல் போட்டிருக்கிறார் நடிகர் விஷால். அஞ்சலி, துஷாரா விஜயனை தியாகம் செய்ய வைத்து சோகம் பிழிய நினைத்திருக்கும் இயக்குனர் விஷாலின் முயற்சி, 'தண்ணிய குடி... தண்ணிய குடி' என்பதாக கடந்து விடுகிறது!

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் போலி வாகன உதிரி பாகங்களால் நிகழும் விபத்துகள், 'சாலை பழுது, ஓட்டுனர் அஜாக்கிரதை' என்பதாக மறைக்கப்படுகிறது. இக்கருவில் சுழல வேண்டிய கதை, இதற்கு சம்பந்தமில்லாத தந்தை - மகன் பஞ்சாயத்தால் குழிக்குள் இறங்கி குப்புற படுத்துக் கொள்கிறது.

இளையராஜாவின் 'முத்து மணி மாலை...' பாடலை ரத் தம் தெறிக்கும் வன்முறை காட்சிக்கு பின்னணி ஆக்கியது எல்லாம் கற்பனை கொடூரம்!

இப்படி சொல்வதில் வருத்தமே... வேறு வழியில்லை; 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' விஷால்.

ஆக.,

'ஸ்டாண்ட்' போட்ட சைக்கிளில் விஷாலின் பயணம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us