PUBLISHED ON : செப் 28, 2025

உசுரைப் புடுங்குற எமன்கிட்டேயும் கயிறு இருக்கு; காப்பாத்துற சிவன்கிட்டேயும் கயிறு இருக்கு; நீ சிவனா... எமனான்னு பார்க்கலாமாய்யா?
ஏன்யா... பக் கம் பக்கமா தர்ற வசனத்தை மனப்பாடம் பண்ணி ஒரே டேக்ல பேசி நம்மகிட்டே கைதட்டு வாங்குற நடிக ருக்கு, கட்சி தலைவனா நின்னு பேசப்போற ஒரு ஊர் பிரச்னைகளை, பக்கம் பக்கமா எழுதிட்டு வந்து பார்த்துதான் வாசிக்க முடியுதே தவிர மனப்பாடம் பண்ணி சொல்ல முடியலை பார்த்தியா!
அட கிறுக்குப்பய புள்ள... 'மண்ணையும், மக்களையும் நான் எவ்வளவு நேசிக்கிறேன்; சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன்'னு விசிலடிக்கிற பயலுகளுக்கும் அதை பார்க் குற நமக்கும் அந்த தலைவரு சொல்ற சேதிடி அது!
ம்ம்க்க்க்கும்... நீ இப்படி பேசுறே... ஆனா, உன் புள்ள... முறைக்காதய்யா... 'நீங்க யாரும் குடிக்கக் கூடாது; 'டாஸ்மாக்' பக்கம் போகவே கூடாது; இது, என் மேல சத் தியம்னு நம்ம தலைவர் ஏன் சொல்ல மாட்டேங்குறார்'னு வாரா வாரம் போய் விசிலடிச்சுட்டு வர்ற உன் மகன் யோசிக் கவே மாட்டேங்குறானே ...
வாஸ்தவம்தான்... அவன் யோசிச்சிருக் கணும்; நீ சொன்னமாதிரி அவரு சொன் னாருன்னா, குடிகாரனுங்களை திருத்துன மாதிரியும் இருக்கும்; தி.மு.க., அரசுக்குப் போற 'டாஸ்மாக்' வருமானத்தை தடுத்த மாதிரியும் இருக்கும்!
அதான்யா கேட்குறேன்... ஏன் சொல்ல மாட்டேங்குறாரு?
அட எவடி இவ... இதை அவரு சொன்னா எவனாவது கேப்பானா; அப்புறம், 'கூடுற கூட்டம் ஓட்டா மாறாது'ன்னு சொல்ற கும்பல், 'நான்தான் அப்பவே சொன் னேன்ல...'ன்னு சிரிப்பா சிரிச்சு கும்மி அடிச்சிராதா?
இவ்வளவு வக்கனையா பேசுறவுக பெத்த புள்ளைக்கு இதை விவரமா புரிய வைக்கிறதுக்கு என்ன?
அடிப்போடி போக்கத்தவளே... 'அடுத்த கூட்டத்துக்கு போறப்போ என்னையும் கூட்டிட்டுப் போடா மவனே... நானும் அவரைப் பார்க்கணும்'னு சொல்லிட்டு இருக்கேன்... இது தெரியாம... சரி... 'மீன் அரிப்பு' இருக்குதா?
யோவ் ... நாகப்பட்டினமும் போயிருந்தியா ... 'மீன் குழம்பு'ன்னு கேளுய்யா...
வெட்டிவேரு வாசம்...
வெடலப்புள்ள நேசம்...