PUBLISHED ON : ஜன 04, 2026

நல்லா ஞாபகம் வச்சிக்கிடுங்க; நாம தென்காசி தியானத்துக்குப் போனது ஆகஸ்ட் 2ம் தேதி; திரும்பி வந்தது ஆகஸ்ட் 3ம் தேதி; புரிஞ்சுதா?
யப்பா... தங்கச்சியும் நானும் முன்னமாதிரி இல்ல... எல்லாத்தையும் இப்போ நல்லா ஞாபகத்துல வைச்சிக்கிடுதோம்; இந்தா... இப்போ, திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை ஸ்கூல் சுவரு இடிஞ்சு ஒரு பையன் செத்துட்டாம்லா; அதுக்கு அமைச்சர் மகேஷு என்ன சொன்னாருன்னு தங்கச்சி என்கிட்டே கேட்டா!
யாரு... இவளா; நீ என்ன சொன்னே?
சார்வாள் கட்சி ஆட்சிக்கு வந்த 2021ம் வருஷம் டிசம்பர் மாசம், நம்ம திருநெல்வேலி ஸ்கூல் டாய்லெட் சுவர் இடிஞ்சு, படிக்கிற பயலுவோ மூணு பேர் இறந்தப்போ அவாள் என்ன சொன்னாவன்னு சொன்னேன்!
ஆத்தி... இன்னுமாட்டி அதை ஞாபகம் வைச்சிருக்கே; எங்க சொல்லு கேப்போம்!
'இப்படியொரு சம்பவம் இனிமேல் நடக்காத அளவிற்கு பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்படும்'னு சொன்னாவோல்லா!
ஏங்க... 'வாய்ச்சதும் சரியில்லை... பெத்ததும் சரியில்லை'ன்னு அடிக்கடி சொல்லுவீயளே... எப்படி என் புள்ள வளர்ப்பு?
ஏட்டி... நீ கிண்டுன பாயாசத்துல உங்கம்மா ஏன்டி கரண்டி போடுதா?
யப்பா... அம்மாவும் முன்ன மாதிரி இல்ல; திருப்பரங்குன்றம் துாண் விவகாரத்தைப் பத்தி நானும் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்குறப்போ, 'இதை ஏன்டி 'முஸ்லிம்களுக்கு எதிரா ஹிந்துக்களை கிளப்பி விடுறானுவோ'ன்னு திருமாவளவன் பேசுதாரு; 'ஹிந்துக்கள் ஒற்றுமையா கூட ஒரு வாய்ப்பை உருவாக்கித் தர்றானுவோ'ன்னு சொல்லலாம்லா'ன்னு கேட்குறாங்கப்பா!
யாரு... உங்கம்மையா... நம்ப மாட்டேன்; என்கிட்டே எதையாவது இப்படி விவரமா கேட்கச் சொல்லு... நான் நம்புதேன்!
ஏங்க... இங்க பாருங்க; கஞ்சா போதையில நாலு சின்னப்பயலுவ வடநாட்டுக்காரனை வெறித்தனமா கொத்துனதை நீங்க பார்த்தீயள்ல... இப்போ சொல்லுங்க... 'நவீன தமிழகத்தின் சிற்பி' யாரு?
ஏட்டி... என்ன கேள்வி இது; அது நம்ம முதல்வரோட அப்பா 'மு.கருணாநிதி'ல்லா!
அடி சக்கை... என் புருஷன் சுயம்புவா கொக்கா; இவுக தெளிவுக்கு முன்னாடி அந்த ஜீத்து ஜோசப்பே வந்தாலும் எதையும் கண்டுபிடிக்க முடியாது; நீ தைரியமா இரு மக்கா.

