தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோகிலா தங்கை உதயநிதிக்கு உதவி



வணக்கங்க; என் பேரு 'ரெமோ' குமாரு; திருவள்ளூர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர்; இவன் என் தம்பி எல்.கே.; உங்க ரெண்டாவது பொண்ணு சோபியை தம்பி லவ்வுறாப்ல!

தம்பி 'ரெமோ' குமாரு... என் பொண்ணு சோபியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்; போன வாரம் சட்டசபையில, 'லாட்டரி, லாட்டரின்னு கிண்டல் பண்றீங்களே... அப்புறம் எதுக்கு லாட்டரி வித்தவர்கிட்டே 900 கோடி ரூபா வாங்குனீங்க'ன்னு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டாருல்ல...

நானும் பார்த்தேங்க... 'அதை கொடுத்தவர் கிட்டே போய் கேளுங்க'ன்னு, தமிழ்நாடு தன் நோஸ் மேல பிங்கர் வைக்கிற மாதிரி எதிர்க்கட்சி தலைவர் கூட அசத்தலா பதில் சொன்னாரே...

ஆங்... அதைப் பார்த்த என் பொண்ணு சோபி என்ன சொன்னான்னு தெரியுமா; 'உதயநிதி இப்படி பதில் சொல்லியிருக்க வேண்டாம்மா; இதுக்கு பதிலா, 'பாம்பு பிடிச்ச காசுல பல் இருக்காதுன்னு நினைச்சோம்; இப்போ, விஷம் கக்கிருச்சு; இனி, விழிப்போட இருப்போம்'னு முத்தமிழறிஞர் பேரனா கெத்தா பேசியிருக்கலாம்'னு சொன்னா!

அருமைங்க... 'தெரியாம பண்ணின தப்பை ஒத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு; இனிமே, தப்பு பண்ண மாட்டோம்'னு மன்னிப்பு கேட்ட மாதிரியும் ஆச்சு; நம்ம மக்களுக்கு இதானே பிடிக்கும்!

அதுமட்டுமில்ல 'ரெமோ' குமாரு... இன்னொண்ணும் சொல்றா; 'இப்போ, 'நீட் தேர்வு வேண்டாம்'னு சொல்றவங்க, 'நீட்' தேர்வுல தோல்வி அடைஞ்சு 'தற்கொலை' பண்ணிக்கிட்ட 'அரியலுார் அனிதா' படத்தை வைச்சே ஏன் போராடணும்?

'நீட் தேர்வுல அதிக மார்க் வாங்கியும் 'இட ஒதுக்கீடு' காரணமா அரசு மருத்துவ கல்லுாரியில இடம் கிடைக்காம, இல்ல... தனியார் கல்லுாரியில இடம் கிடைச்சும் பணவசதி காரணமா சேர முடியாம 'வாழ்றவங்க' படத்தை வைச்சு போராடலாமே; ஆனா, செய்ய மாட்டாங்க... காரணம், அரசியல்'ன்னு சொல்றா!


அருமைங்க... சோபி விவரமான பொண்ணு!

இப்ப சொல்லு குமாரு; 'சினிமா பார்க்குறதும், 'விசில்' அடிக்குறதுமே வாழ்க்கை'ன்னு வாழ்ற உன் தம்பிக்கும், என் பொண்ணுக்கும் பொருந்துமா; உனக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி துாணை முட்டி க்கி ட்டு நிற்கிறவனுக்கு நீ கட்டிக் கொடுப்பியா?

ம்ம்ம்... மாட்டேங்க; நீங்களும் உங்க சோபியை கொடுக்காதீங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us