தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : ஆக 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசிலுக்கு அடங்கும் துரைசிங்கம்

துரைசிங்கம்... ஒழுங்கு மரியாதையா மயில்வாகனன் தம்பி வைகுண்டத்தை வெளியே விடு!

முடியாது சார்... நம்ம சபாநாயகர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்றப்போ, அதை ஆதரிக்கணும்னு த.வெ.க., எம்.எல்.ஏ.,கிட்டே பேரம் பேசுனதா, தி.மு.க.,காரங்க மேல வழக்கு நடக்குறது உங்களுக்குத் தெரியாதா...

யோவ்... நான் என்ன சொல்றேன்... நீ என்ன பேசிட்டு இருக்குறே?

சார்... சும்மா கத்தாதீங்க... பொறுமையா கேளுங்க; இந்த சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னாடி இப்படி சம்பவம் நடந்திருக்கிறப்போ, 'சபாநாயகர் சபையை சிறப்பாக நடத்துகிறார்'ன்னு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டின செய்தி, இப்போ ஏன் வெளியாகுது; ஏன்னா... 'பதியப் பட்ட வழக்கு சொல்ற மாதிரி தி.மு.க., எந்த முயற்சியும் எடுக்கலை'ன்னு மக்களுக்கு புரிய வைக்கப்படுது!

சரிய்யா... இதுக்கும் நீ வைகுண்டத்தை கைது பண்ணி வைச்சிருக்கிறதுக்கும்...

சம்பந்தம் இருக்கு சார்... 'இந்த பாராட்டு இப்போதைக்கு மட்டும்தான்'ங்கிற உண்மையும், 'இதனாலதான் இது மு.க.ஸ்டாலின் மூலமா சொல்லப்படாம, கவிஞர் வைரமுத்து மூலமா சொல்லப்படுது'ங்கிற தந்திர அரசியலும் வைகுண்டத்துக்குப் புரியலை. இந்த மங்குனி எல்லாம் வெளியே நடமாடலாமா சார்?

துரைசிங்கம்... பைத்தியமா நீ; இதெல்லாம் எதுக்குய்யா இவனுக்குப் புரியணும்?

புரியணும் சார்... இது புரிஞ்சாத்தான், 'நடிக்கும் போது வெறும் விஜய்; இப்போ, ஜோசப் விஜய்; இது ஏன்'னு பொங்குற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோட கேள்வி புரியும்; 'முதல்வரைப் பார்க்க மக்கள் அதிகம் கூடிவிடுவர் என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் அவர் பங்கேற்க மாட்டார்'னு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தந்த 'மக்கள் நலன் சார்ந்த' பேட்டி புரியும்; 'தேர்தலில் ஜாதி, மதம் ஒழித்த கட்சி த.வெ.க.,'ங்கிற கோஷத்தோட அர்த்தம் ஆழமா புரியும்!

அடப்போய்யா... ஓட்டு போடுறவனே இவ்வளவு யோசிக்கிறதில்லை; இவன் ஆள் கடத்துறவன்... இப்போ நீ அவனை விடுவியா... மாட்டியா?

மாட்டேன்; வேணும்னா 'விசில்' ஊதி கேளுங்க... யோசிக்கிறேன்.

ச்ச்சே... இப்போ நான் விசிலுக்கு எங்கேய்யா போவேன்; ஏய் வைகுண்டம்... 'விசில்' வைச்சிருக்கியா?

ம்ம்ம்... இருக்கு சார்; இந்தா... ஊதுங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us