PUBLISHED ON : ஜூலை 19, 2026

ஈ.வெ.ரா., அறியாத சுந்தரபாண்டியன்
இவுகதான் கண்டமனுார் ரகுபதி; அந்தபக்கம் பெரிய தலகட்டு! உன் மக கூட
சுத்திக்கிட்டு இருந்தான்ல... சுந்தரபாண்டியன்... அந்த பயலோட அப்பா!
யாரு... 'ஈ.வெ.ரா.,வுக்கு 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்'னு 'யுனெஸ்கோ மன்றம்'ங்கிற அமைப்பு பட்டம் வழங்கி சிறப்பித்தது'ன்னு ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல இருக்குறதை அப்படியே வாசிச்சு விட்டுப் போவானே அந்த டியூஷன் வாத்தி... அவன் அப்பன்தானே?
ஆமாப்பா; ஆமா... அந்த பய சொன்னதுல என்ன தப்புன்னு இம்புட்டு அழுத்தமா கேட்குறே?
யோவ் மீசை... புத்தகத்துல இருக்குறதை அப்படியே அவன் வாசிச்சது சரிதான்யா; ஆனா, 'அந்த 'பட்டம்' தந்த அமைப்புக்கும் 'யுனெஸ்கோ'ங்கிற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது'ன்னு, அந்த புத்தகம் சொல்லாத உண்மையை சேர்த்து சொல்லித் தரணுமா இல்லையா; அதானே கத்துக்கொடுக்குற வாத்திக்கு அழகு!
ஹலோ... நான் அண்ணாந்து தண்ணி குடிச்சுட்டு இருக்குறப்போ நீங்க என் மகனை கலாய்ச்சதை கேட்டேன்; இப்படி வக்கனையா பேசுறீங்கள்ல... எங்கே... 'புகழுரை, பொய்யுரையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை'ன்னு சொன்ன தமிழக முன்னாள் முதல்வர் யாருன்னு உங்க மகளை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்!
என்ன மருமகளே... பதில் தெரியலையா... 'க்ளூ' தரவா; 'வளமான தமிழகம், மகிழும் விவசாயி, அனைவருக்கும் தண்ணீர்/ உயர் தர கல்வி / உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்கள், உயர்தர ஊரக கட்டமைப்பு, மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கை தரம்... இதெல்லாம் என் இலக்குகள்'னு பதவி ஏற்றதும் கனவு கண்டவர்; ஆனா, 'லஞ்சம் கேட்டா கொடுக்காதீங்க; என் பேரைச் சொல்லுங்க'ன்னு மட்டும் சொல்லாதவர்; அந்த முன்னாள் முதல்வர் யாரு?
ஏங்க ரகுபதி... அதான் என் மக முழிக்கிறால்ல... விடுங்க; அவ அப்பனா பதிலை நான் சொல்றேன்... மு.க.ஸ்டாலின்!
சபாஷ் சம்பந்தி; பாருங்க... இதுக்கு மேல நம்ம புள்ளைங்களுக்கு என்ன பொருத்தம் வேணும்; வறட்டு கவுரவம் பார்க்காம ரெண்டு மூளைக்காரங்களையும் சேர்த்து வைச்சிருவோமே; ஆத்தா... கவலைப்படாம இரு... என்னைக்கு இருந்தாலும் நீதான் என் வீட்டு மருமக.
