PUBLISHED ON : அக் 05, 2025

செய்தி: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு; அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை!
அநீதி: 'வாரிசுக்கு அரசுப்பணி பரிந்துரை' தீர்மான கடிதம் வெறும் காகிதமாகி கிடக்கும் அவலம்!
முதல்வரே ... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கீராநல்லுார் மேலத்தெ ருவில் இரண்டு மகன்களோடு வசித்து வரும் நான், 41 வயது புஷ்பா; மார்பக புற்று நோயாளி! எனது கணவர் கேரளாவில் விவசாயக்கூலியாக இருக்கிறார்.
தமிழக மின்வாரிய ஒப்பந்த பணியாளரான எனது இரண்டாவது மகன் அர விந்தராஜ், மே 6, 2023ல் புதுப்பட்டினம், பழையார் சுனாமி நகரில் மின்மாற்றி பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டான்!
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத் தில் நிகழ்ந்த சமரச பேச்சுவார்த்தையில் உங்கள் அமைச்சர் மெய்ய நாதனும் கலந்து கொண்டது நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அந்த கூட்டத்தின் முடிவில், 'உரிய இழப்பீடும், இறந்தவரின் வாரிசு ஒருவருக்கு அரசு அலுவலக உதவியாளர் / ஓட்டுநர் / கிராம உதவியாளர் பணி வழங்கிட பரிந்துரை செய்வது' எனவும், 'முதல்வர் பொது நிவாரண நிதிக்கு முன்மொழியப்படும்' என்றும், ப.வெ. 10/2022/அ2 எண் குறிப்பிட்ட தீர்மான கடிதம் கிடைத்தது.
சொன்னபடி நிவாரணம் மட்டும் தந்துவிட்டு, அரசு வேலையை தராமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பது நியாயமா; 'சொன்ன தைச் செய்யும் அரசு' என அடிக்கடி நீங்கள் மேடையிலும் அறிக்கையிலும் சொல்வது இதைத்தானா முதல்வரே?