தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!

முதல்வரே... ஒரு நிமிஷம்!


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குற்றவாளி அந்த பாம்பு அல்ல



செய்தி:
கதவு திறக்காத வி.கே.புதுார், ஆலங்குளம் அரசு மருத்துவமனைகள்; பாம்புக்கடியால் இளைஞர் பலி!

அநீதி: சிகிச்சை தாமதம்; பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்காத சோகம்!

முதல்வரே... இரவு தொடங்கி விடியற்காலை வரை வி.கே. புதுார், ஆலங்குளம், சுரண்டை, தென்காசி, திருநெல்வேலி என ஐந்து அரசு மருத்துவமனைகளுக்கு, கிட்டத் தட்ட 100 கி.மீ.,க்கும் மேல் அலையாய் அலைந்தும், பாம்புக் கடிக்கு முறையான சிகிச்சையின்றி என் மகனை இழந்து நிற்கிறேன்; இறந்து போன என் மகன் ஆகாஷ் தங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரும் கூட!

இதயநோயாளியான நான் கிருஷ்ணன், கூலித்தொழிலாளி; கர்ப்பப்பை அகற்றப்பட்டு உடல்நல கோளாறுடன் அவதிப்படும் என் மனைவி மாரி, பீடி சுற்றும் தொழிலாளி. சம்பவத்தின் போது அவன் இரண்டாம் ஆண்டு கல்லுாரி மாணவன்!

கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சுரண்டை காவல் நிலையத்தில் எண்:209 கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருக்கிறது. மருத்துவ பணியில் அலட்சியமாக செயல்பட்டு என் மகன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 15ம் தேதி மனு அளித்தோம்.

இதன் தொடர்ச்சியாக, மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் சிலர் எங்களிடம் விசாரணை நடத்தியதோடு சரி; எந்த நடவடிக்கையும் இல்லை! முதல்வரே... என் மகனது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் கூட சம்பவ தேதி, நேரத்தை தவறாக பதிவு செய்திருக்கிறது உங்கள் அரசு நிர்வாகம்.

இப்போது சொல்லுங்கள்... என் மகன் இறப்புக்கு காரணம்... பாம்புக்கடியா அல்லது அரசு மருத்துவமனைகளின் அலட்சிய செயல்பாடா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us