sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

ஏழரை கேள்விகள்!

/

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இவை 'வதந்திகள்' என்று பெயர் சூட்டப்பட்டு விடுமோ' என்கிற அச்சம் ஒருபுறம் இருக்க, இரு திராவிட கட்சிகளின் 58 ஆண்டு 'பொற்கால' ஆட்சி தந்த பகுத்தறிவின் பலனாய், தமிழர்கள் மனதில் இன்று பல கேள்விகள்; அவற்றில் சில...

1. கரூர் கூட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் பணத்தை நிவாரணமாய் தந்ததெல்லாம் இருக்கட்டும்; பலியான அத்தனைபேரும் அன்றைய கூட்டத்தில் கலந்திருந்தனர் என்பது எந்தவகையில் உறுதி செய்யப்பட்டது?

2. நடிகரை முதல்வராக்கி மகிழ்ந்த மண் இது; 'கரூர் சம்பவம் போன்று இதுவரை நடந்ததில்லை' எனச் சொல்வது வேதனை பதிவா அல்லது 'எந்த கட்சி தலைவனுக்கும் இப்படி கூட்டம் சேர்ந்ததில்லை' எனும் வியப்பா?

3. 'இறந்த 41 பேரில் 39 பேர் சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்' என்று சொல்லியாயிற்று; 'அவர்களது குடும்பத்தினர் இதை, 'இல்லை' என மறுப்பது வேண்டாம்; 'சரி' என ஏற்கும் காட்சிகள் உண்டா?

4. 'த.வெ.க., தலைவர் ஜோசப் விஜயின் முகம் பார்த்திருந்தால் கூட்டம் வழியிலேயே கலைந்திருக்கும்' என்று மீண்டும் மீண்டும் சொல்வது, 'அவரது பேச்சை கேட்க மக்கள் விரும்புவதில்லை' என்று நம்ப வைக்கும் முயற்சியா? *'தொண்டர்கள் இறப்பை அரசியல் தலைவர் விரும்ப மாட்டார்' என்று முதல்வரும், 'மக்களை அதிகமாய் திரட்டி அரசியல் பலம் காண்பிக்க விஜய் தாமதமாக வந்தார்' என்று காவல் துறையும் முரண்படுவதில் சிரிப்பதா... அழுவதா?

5. அன்று... அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்ற வழக்கில், 'ஒருவர்தான் குற்றவாளி' என்று விசாரணைக்கு முன் முந்திய காவல் துறை, இன்று 'கரூர் கூட்டத்தில் கல்வீச்சு இல்லை' என்று அதேவேகத்தில் முந்துவது ஏன்?

6. 'பலியான பொதுமக்கள், தொண்டர்கள் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது; பலியான குழந்தைகள், பெண்கள் எண்ணிக்கை அனைவருக்கும் தெரியும்!' - வெளிச்சம் பாயாத தகவலில் ஒளிந்திருக்கிறதா 2026ன் மக்கள் தீர்ப்பு?

7 1/2 'ஜனநாயகம்' என்றால்...?






      Dinamalar
      Follow us