sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

ஏழரை கேள்விகள்!

/

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : நவ 30, 2025

Google News

PUBLISHED ON : நவ 30, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

' டாஸ்மாக்கே கதி என கி டக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் அப்பாக்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை முன்னேற்றுவர்' என துணை முதல்வர் உதயநிதியின் முன் சிவகங்கை மாணவி யோகேஸ்வரி வைத்த கேள்வியோடு, இக்கேள்விகளையும் நீட்டுகிறது தமிழகம்...

1. 'செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம் என ஈ.வெ.ரா.,வால் துாற்றப்பட்டவர்கள் இணைந்து தி.மு.க., உருவாகி இருக்கிறது' என்றார் அண்ணாதுரை; 'தற்குறிகள்' என இன்று சிலரை வசைபாடுவோர் இந்த வரலாறு அறியாதவர்களா என்ன?

2. 'அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலர் பழனிசாமி' என்று நகையாடுகையில், 'ஈ.வெ.ரா., அமர்ந்திருந்த பீடம் என்பதால் தி.மு.க.,வில் தலைவர் பதவி இல்லை' என அண்ணாதுரை சொன்னது தங்கள் நினைவிற்கு வருகிறதா?

3. 'ராமாயணம் வால்மீகியின் கற்பனை... கற்பனை மட்டுமே ' என 2007ல் தமிழக முதல்வராக இருந்து கருணாநிதி சொன்னதை, 'சனாதன தர்மம்' போற்றும் 'கோவிதாரா கொடி' பறக்கும் இன்றைய சூழலில் வாபஸ் பெறுவீர்களா?

4. 'அண்ணாதுரை அணிந்திருந்த 'தளபதி' பட்டம் அவர் மறைவுக்குப் பின் இடம்மாறியது மரியாதைக்குரிய நிகழ்வு' எனில், 'கலைஞர்' எனும் பட்டம் தி.மு.க.,வில் தகுதியுள்ள யாருக்கேனும் கவுரவம் செய்யும் வாய்ப்பு உண்டா?

5. 'தவறு செய்தது தலைவரே ஆனாலும் கண்டித்திட தயங்க மாட்டோம்' என்று ஈ.வெ.ரா.,வை குறிப்பிட்டு அன்று பகுத்தறிவோடு அண்ணாதுரை முழங்கியது போல, இன்று பகுத்தறிவோடு முழங்கும் தொண்டன் உ ள்ள கட்சி எது?

6. சமீபத்திய தங்களின் விளம்பர பாடல், 'அண்ணாதுரை தடத்தில் உதயநிதி' என்கிறது; அண்ணாதுரைக்கு ரத்த சம்பந்தமில்லா கருணாநிதி அவரது இடத்திற்கு வந்தது போல், தி.மு.க., தலைமை பதவி இனி நிரப்பப்படுமா?

7. 'மோடிக்கு இணையானவர் ராகுல் ' என்ற அரசியலை அலசி ஆராய்ந்து, 'பொருத்தம் இல்லையே' என்று சொன்ன மூளைக்கார தமிழகம், சுயம்புவான த.வெ.க., தலைவர் ஜோசப் விஜயோடு யாரை ஒப்பிட்டாலும் சிரிக்கும்தானே?

7 ½ நடிகரை தலைவனாக ஏற்பது பகுத்தறிவா?






      Dinamalar
      Follow us