
'சென்னை, அண் ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில், நீதித்துறை நிர்வாகத்தை தமிழக காவல் துறை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விட்டது' என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததை எண்ணி விரக்தியில் இருக்கும் தமிழச்சியிடம் சில கே ள்விகள்...
1. 'அ.தி.மு.க., எம்.எல். ஏ., மகனுக்கு குவாரி ஒதுக்கிய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும்' என்று, 2020ல் தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி பொங்கியது, சமீபத்திய கரூர் குவாரி அட்டூழியத்தின் போது நினைவி ற்கு வந்ததா?
2. 'நீட் 'கட் ஆப்' மதிப்பெண் படிப்படியாக குறைக்கப்படுவது மாணவர்களின் தரத்தை அர்த்தமற்றதாக்குகிறது' என பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' தேர்ச்சி மதிப்பெண்ணை முதல்வர் குறைத்தது நியாயம்தானா?
3. ஒப்பனைக்கு முக்கியத்துவம் தரும் நடிகர், 'கட்சி தலைவர்' ஆனதும் வேஷம் கலைத்து மேடை ஏறும் நிலையில், நடிகரைக் காட்டிலும் அதீத ஒப்பனையுடன் மூத்த அரசியல் தலைவர் அடிக்கடி 'போஸ்' கொடுப்பது வருத்தம் தருகிறதா?
4. தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானம் துணை முதல்வர் உதயநிதிக்கு வழங்கிய, '26வது குருமகா சன்னி தானத்திடம் மு.கருணாநிதி ஆசி பெறும் புகைப்படம்' இன்று எங்கு எப்படி உள்ளதென அறியும் ஆசையுண்டா?
5. மறைத்திருக்கும் ஆ யுதங்களை எடுக்கச் செல்கையில் போலீசாரின் முழங்கைகளில் கைதிகள் வெட்டுவதும், அதைத் தொடரும் என்கவுன்டர்களும் நம் காவல் துறையினரின் அஜாக்கிரதை சொல்கிறதா... ஆற்றல் சொல்கிறதா?
6. அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களை அப்போதைய கவர்னரிடம் கொடுத்த மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வரான பின் அவைமீது பெற்றுத் தந்த தண்டனைகள் எத்தனை?
7. 'டாஸ்மாக் திறக்காது கஜானாவை நிரப்ப நல்வழி பாருங்கள்; இல்லை... ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்' என 'கொரோனா' தருணத்தில் தமிழர்கள் நலன் விரும்பிய ரஜினிகாந்த், இப்போது என்ன சொல்வார் எ ன எதிர் பார்க்கிறீர்கள்?
7 ½ 'விசில்' ஊத விருப்பம் உண்டா?

