sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மது அருந்துவதை குறைக்க படிப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனும் வாக்குறுதிக்கும், '717 மதுக்கடைகளை மூட நடவடிக்கை' எனும் செய்திக்கும் உள்ள தொடர்பு பற்றி, சிந்தித்து சிலாகிக்கும் 'அறிவார்ந்த' தமிழக மக்கள், வசீகர தமிழக முதல்வரிடம் கேட்கும் சில கேள்விகள்...

1. எதிர்க்கட்சி தலைவருக்கான அறிக்கையில், 'மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் த.வெ.க., உறுதியாய் இருக்கிறது' என குறிப்பிட்ட முதல்வரே... உதயநிதியின் 'சனாதன ஒழிப்பு' கருத்தை புதைக்கும் தங்களது எதிர்கருத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?

2. ஆட்சியில் எந் த குறை சொன்னாலும், 'முந்தைய ஆட்சி செய்து வைத்த அலங்கோலம்தான் காரணம்' என தமிழக முதல்வர்கள் சொல்வது வழக்கம்; நீங்களும் உங்கள் அமைச்சர்களும் இப்படி நா சுழற்ற மாட்டீர்கள் என நம்பலாமா?

3. அறுபது ஆண்டு காலமாக இரு திராவிட கட்சிகளின் நிர்வாகத்திற்கு பழகிய அரசு அதிகாரிகள், உங்களின் நிர்வாக முயற்சிக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்தால், மக்கள் மன்றத்தில் அதை வெளிப்படையாக சொல்வீர்களா?

4. 'விசில்' புரட்சி செய்திருக்கும் எளிய மக்கள், 'தலைகவசம் அணியாததற்கு அபராதம் சரி; தரமான சாலை எங்கே' என போக்குவரத்து காவலரிடம் இனி கேட்டால், 'போய் அரசிடம் கேள் ' எனும் அர்த்தமற்ற பதில் வராதுதானே?

5. 'பெரும் வருமானம், வசதியான வாழ்க்கை துறந்து உங்களுக்காக வந்திருக்கிறேன்' என பிரசாரத்தில் சொன்ன எங்கள் விஜய், 'அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர்' எனும் அடையாளம் பெறும் வாய்ப்புண்டா?

6. அதிதீவிர களையெடுப்பு நடத்தி, 'என் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல் துறையில், 'நேர்மையற்றவர்கள்' என யாரும் இல்லை' எனும் உத்தரவாதம் தர, தங்களுக்கு எத்தனை நாள் அவகாசம் தேவைப்படும் முதல்வரே?

7. 'என்று தணியும் இந்த சினிமா மோகம்' என்பது எப்போதையும் விட தற்போது தமிழக மக்கள் மனதில் ததும்பி நிற்கும் பெரும் ஏக்கம்; மக்கள் முதல்வராக இம்மோகம் களைய தாங்கள் எடுக்க விருக்கும் நடவடிக்கை என்ன?

7 ½ லஞ்சம் ஒழிக்கப்படும் தேதி?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us