தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காட்டி கொடுக்காத கம்யூ.,

தேர்தல் பிரசாரத்தின் போது, 'எது உண்மை, எது பொய்' என பிரித்தறிய இயலாது தவித்த சகோதரா... தேர்தல் முடிவுக்குப் பின் நீ படிப்பதிலும், பார்ப்பதிலும், கேட்பதிலும் 'உண்மை எது, பொய் எது' என சரியாக கணிக்க முடிகிறதா; எங்கே... சோதித்துப் பார்க்கலாமா?

1 'தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது அரசியல் பேரிடர்' எனும் உங்கள் கருத்தை நாங்கள் ஏற்க, 'தி.மு.க., தோல்விக்கான காரணங்களில் 'வாரிசு அரசியல்' முதன்மை காரணம்' எனும் 'உண்மை'யை நீங்கள் ஏற்பீர்களா உதயநிதி ஸ்டாலின்?' - இப்படி கேட்கத் தோன்றுகிறதா?

2 'தி.மு.க., ஆட்சியின்போது நேர்மையான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன' என்று மா.கம்யூ., எம்.பி., சு.வெங்கடேசன் சொன்னதும், 'அவர்கள் யார்' என கேட்காதோர் 'உண்மை'யின் உருவங்கள்; என்ன... இது சரிதானே?

3 'துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் யாவரும் பெரும் மகிழ்ச்சியோடு உள்ளனர் என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொன்னதை அ.தி.மு.க., நிர்வாகிகள் அப்படியே நம்பினர்' எனும் செய்தி 'பொய்' கலப்பற் றதா?

4 'த.வெ.க.,வில் இணைந்த கம்யூ., மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவறு செய்தவர்' என இ.கம்யூ., கட்சி சொன்னபோது, 'கட்சியில் இருக்கும் வரை யாரையும் இ.கம்யூ., காட்டிக் கொடுக்காது' எனும் 'உண்மை' உனக்கு புரிந்ததா?

5 த.வெ.க., பக்கம் செல்லும் தன் கூட்டணி கட்சியினரை பெரிதாக வசைபாடாத தி.மு.க., தலைவரின் பொறுமை, 'நடப்பவை நாடகம்' என்பதாக சிலருக்கு உணர்த்து கிறதாம்; இப்படி சிந்திக்கும் மனம் 'உண்மை' விரும்புகிறதா?

6 'த.வெ.க., அரசுக்கு கவசமாக இருந்து ம.தி.மு.க., காக்கும்' என்று வைகோ உணர்ச்சிப் பொங்க பேசியபோது, 'இவர் 'உண்மை'யை மட்டுமே சொல்வார்; சொன்னதை மட்டுமே செய்வார்' என்று நம் முதல்வர் நம்பி இருப்பாரா?

7 'இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளில் ஆந்திராவிற்கு மட்டும் 25 சதவீதம் வருகிறது' என்று ஆந்திர முதல்வர் சொன்னதும், 'அய்யோ...' என்றோ, 'அது பொய்' என்றோ அலறாத நம் மனம் யாரை, எதை 'உண்மை' என நம்புகிறது?

7 ½ 'எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா, ஜனநாயகப் படுகொலை' - இது பொய்யா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us