தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருத்துங்கள் திருமா

'நான் விடும் மூச்சுக்காற்று கூட 'சமூக நீதி' பேசும்' என வாழ்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை, 'நா புரட்டி பேசுகிறார்' என்று ஏளனமா செய்கிறீர்கள்; இதோ... உங்களை திருத்தும்படியான பதில் தர திருமாவுக்கு வாய்ப்பு தரும் கேள்விகள்...

1. 'இணையத்தில் கசிந்த திரைப்படத்தை பார்ப்பது குற்றம்' எனச் சொல்பவன், 'தேர்வுக்கு முன் கசியும் வினாத்தாளை பார்ப்பது குற்றம்' என உணரத் தவறுவது, ஆட்சியாளர்கள் இச்சமூகத்தை செதுக்கி வைத்திருக்கும் லட்சணத்தின் சாட்சியா?

2. 'கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைத்தால் உடைப்பேன் என்றவர் இடைத்தேர்தல் பொது வேட்பாளராம்' - தங்களின் இக்கிண்டல், 'நேரடியாக முதல்வர் பதவி என்பது விஜயின் அரசியல் அறியாமை' என நீங்கள் பேசியதை நினைவூட்டியதா?

3. 'காதல், திருமணத்தில் ஜாதி கூடாது' என முழக்கமிடும் இச்சமூகம், 'கல்வியில் ஜாதி பார்த்து சலுகை தரக்கூடாது; வேலைவாய்ப்பில் ஜாதி பார்த்து வாய்ப்பு தரக்கூடாது' என, 'பகுத்தறிவு' ததும்ப எப்போது 'சமூக நீதி' பேசும்?

4. 'அமைச்சர் பதவியை துச்சமாக மதித்து தன்னோடு பயணித்த தோழரை அமைச்சர் ஆக்கியவர் திருமா என்று, மனமிருந்தால் பாராட்டலாம்' என்கிறீர்களே... உலகம் கொண்டாடும் நம் பிரதமர் மோடியின் எண்ணற்ற சாதனைகளில் நீங்கள் மனதார பாராட்டியது எத்தனை?

5. 'ஆடு, மாடு மேய்ப்பவனின் பிள்ளையாகப் பிறந்து அரசியலில் தவிர்க்க முடியா சக்தியாகி நிற்கும் எனக்கு யார் தயவும் தேவை இல்லை' என்பது தற்போதைய தங்களின் பெருமைக் குரலா; திருமாவளவனின் நிரந்தர பிரகடனமா?

6. 'தி.மு.க.,வின் கூட்டணிக்கு வி.சி.க., எந்தவகையில் துரோகம் இழைத்தது' எனும் தங்களின் கேள்விக்கு, தி.மு.க., ஓட்டுகளால் வென்றபின், 'த.வெ.க., அரசு வேண்டும் என்பது மக்கள் கட்டளை' என தாங்கள் சொன்னதுதான் பதில்; சரிதானே?

7. 'திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வந்தார் என் பதைவிட, அவ்வருகையில் சிறுபான்மையினருக்கு எதிரான தன் நிலைப் பாட்டை பிரதமர் உறுதிப்படுத்தினார்' எனும் திருமாவின் புரிதல், 'வெறுப்பு அரசியல்' பட்டியலில் அடங்குமா... அடங்காதா ?

7 ½ 'விசுவாசம்' - இதன் பொருள் என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us