தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தண்ணீர்... தண்ணீர்...

வந்த காவிரியால் பயிர்கள் வளரும் வேகத்தைக் காட்டிலும், வராத காவிரியால் ஒருநாளில், ஒரேநாளில் இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்து நின்ற தமிழக எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், இக்கேள்விகளை நீட்டுகிறது இடைத் தேர்தலுக்கு காத்திருக்கும் தமிழகம்!

1. அறுபது ஆண்டுகால திராவிட ஆட்சியில் 'பகுத்தறிவு' பெற்ற கூட்டம்தான் அன்று தஞ்சாவூர் மேடைக்கு கீழே நின்றிருந் தது எனில், 'அவர்கள் என்னவாக புரிந்து கொண்டிருப்பர்' என்றெண்ணி, 'காவிரி யைச் சொன்னேன்' என்று விளக்கினீர்கள்?

2. 'தமிழர் நலனுக்காகவே வாழும் உதயநிதி, தஞ்சாவூரில் இருந்து திரும்பி, தந்தை பார்த்து, உறங்கி எழுந்து, சட்டசபை போய் திரும்பியதும், உடன்பிறப்புகளால் தாக்கப் பட்ட திருநெல்வேலி வாலிபரிடம் பேசுவார்' என்ற எங்கள் நம்பிக்கை ஏன் தோற்றது?

3. 'அரசு துறையில் யாராவது லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என இன்றைய முதல்வர் சொல்வது போல், நம் ஆட்சிக்காலத்திலும் நாம் சொல்லி இருக்கலாமோ' என்ற எண்ணம் ஒருமுறையேனும் எட்டிப் பார்த்ததா?

4. 'தி.மு.க., ஆட்சி திட்டங்களை தொடர் வதால், 'ஊரான் வீட்டு நெய்யில் தன் வீட்டிற்கு இனிப்பு செய்கிறார் முதல்வர்' என்கிறாரே உதயநிதி, அண்ணாதுரை துவக்கியதுதானே தி.மு.க.,' எனக் கேட்பவர்களுக்கு 'நறுக்'கென என்ன சொல்ல?

5. உங்களது முன்னாள் கூ ட்டணி கட்சியினர் உங்களின் 'தண்ணீர்' பேச்சை கண்டித்ததற்காய் திருச்சியில் எழுந்த உங்களது வருத்தம், 'இவர் கைதுக்கு ஏன் நமக்கு 'கண்ணீர்' வரவில்லை' என்று எங்களை சிந்திக்கத் துாண்டியதை நீங்கள் உணர்ந்தீ ர்களா?

6. 'உதயநிதி போல் நீங்களும் என் பிள்ளைகளே' என தொண்டர்களை ஈர்க்கும் உங்கள் தலைவர், 'உதயநிதி தவறாக பேச மாட்டார்' என்கிறார்; தன் பிள்ளைகளாய் அவர் நினைக்கும் உங்கள் உடன்பிறப்புகள் உங்களைப் போல்தானா ?

7. 'செய்த தவறை விட அந்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பது குற்றம்' என, ஆளுங்கட்சியை நீங்கள் எதற்காவது விமர் சித்தால் கட்டாயம் நாங்கள் சிந்திப்போம்; இதையே நாங்கள் சொன்னால் சற்றேனும் நீங்கள் சிந்திப்பீர்க ளா?

7 ½ 'கடவுள் இல்லை' சரி; 'மனிதன்' இருக்கிறானா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us