PUBLISHED ON : மார் 15, 2026

திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில், மே 14, 2022ல் நிகழ்ந்த
கொடூர விபத்தின் மீட்பு பணி நினைவுகளில் மூழ்கும் இவர், துாத்துக்குடி மரிய
மைக்கேல்; இம்மீட்பு பணிக்காக, 2023ல் ஜனாதிபதியிடம் 'ஜீவன் ரக் ஷா'
விருது பெற்றவர் இவர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கும், நம்ம தீயணைப்பு வீரர்களுக்கும் 'மீட்பு பணி' பயிற்சி தர்ற அனுபவத்தால, எனக்கு தீயணைப்பு துறையில இருந்து அழைப்பு; மே 15ம் தேதி காலையில அங்கே போனேன்!
முதல் மூன்று நாட்கள்
400 அடி ஆழத்து க்கு கயிறு போட்டு இறங்கி, முதல்நாள்ல மூணு பேரை காயத்தோட மீட்டோம்; அதுல, ஒருத்தரை காப்பாத்த முடியலை. அடுத்த நாள் முழுக்க பாறைகள் சரிஞ்சுக் கிட்டே இருந்ததால, லாரி கிளீனரை மட்டும்தான் சடலமா மீட்க முடிஞ்ச து.
மூன் றாவது நாள் காலையில பாறைகளுக்கு நடு வுல ஒரு உடம்பு சிக்கியிருக்கிறது தெரிஞ்சது. நள்ளிரவு தாண்டி யும் எப்படி எப்படியோ போராடிப் பார்த்தோம்; ம்ஹும்!
நான்காவது நாள்
ஒவ்வொரு பாறையா வெடி வைச்சு தகர்த் து, கிட்டத்தட்ட 30 மணி நேரத்துக்கு அப்புறம் லாரி ஓட்டுனரோட சடலம் கிடைச்சது. அதைப் பார்த்ததுமே, 'இப்படியெல்லாம் ஒரு மரணம் யாருக்கும் வந்திரக்கூடாது'ன்னு ஆண்டவரை வே ண்டிக்கிட்டேன்.
ஐந்தாவது நாள்
கடைசி உட லை மீட்குற முயற்சியி ல இருக்குறப்போ, கல் குவாரியை எப்பவும் சூழ்ந்திருக்கிற அந்த அடர்த்தியான அமைதியை நொறுக்குற மாதிரி ஒரு பெரும் சப்தம். அண்ணாந்து பார்த்தா, பாறைகள் உருண்டு வருது!
'ஆர் யூ ஓகே மைக்கேல்' னு மேல இருந்து எஸ்.பி., சார் கத்துனது என் வாக்கிடாக்கியில கேட்டதை வைச்சுதான், அன்னைக்கு நான் உயிரோட இருக்குறதையே நம்பினே ன்.
கடைசி மூன்று நாட்கள்
பாறைகளுக்கு நடுவுல செங்குத்தா சிக் கிட்டு இருந்த அந்த உடலை நெருங்க முடியலை. குவாரியோட ஊற்று தண்ணீர் மீட்பு பணிக்கு சவாலாயிருச்சு. எட்டாவது நாள் அந்த உடல் ஊதி பெருத்திருச்சு.
பாறைக்கும் உடம்புக்கும் மயிரளவு கூட இடைவெளி இல்லை. கடும் விரக்தியில, 'அண்ணே... உங்க குடும்பம் எட்டு நாளா மேல காத்திருக்கு; கொஞ்சம் அசைஞ்சு கொடுங் கண்ணே' ன்னு வாய்விட்டு பொருமிட்டேன். நம்ப மாட்டீங்க... அந்த ஆத்மாவுக்கு நான் சொன்னது கேட்டுச்சோ என்னவோ, அசைக்க முடியாம இருந்த அந்த உடம்பை அதுக்கப்புறம் அசைக்க முடிஞ்சது!
அதை மேல ஏத்திட்டு, குவாரிக்கு வெளியே நான் வர்றப்போ ராத்திரி 12:00 மணி. எனக்காக காத்திருந்த அந்த குடும்பம், 'நன்றி சார்'னு என் கையைப் பிடிச்சு அழுதுச்சு! '400 அடி ஆழத்துல இருந்து நாம மேல கொண்டு வந்தது சடலமில்லை... ஒரு குடும்பத்தோட பேரன்பு' ன்னு அப்போ எனக்குப் புரிஞ்சது. ஆனாலும்...
'இப்படி ஒரு நன்றியை நான் கேட்குறது இதுவே கடைசியா இருக்கட்டும்'னு ஆண்டவர்கிட்டே மறுபடியும் வேண்டிக்கிட்டேன்; இப்பவும் வேண்டிக்கிறேன்.

