தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/ஸ்பைடர் - மேன் பிராண்ட் நியூ டே (ஆங்கிலம்/ தமிழ் 3D)

ஸ்பைடர் - மேன் பிராண்ட் நியூ டே (ஆங்கிலம்/ தமிழ் 3D)

ஸ்பைடர் - மேன் பிராண்ட் நியூ டே (ஆங்கிலம்/ தமிழ் 3D)


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொல்லி அடிக்கும் ஸ்பைடர் மேன்

கடந்த பாகத்தில் பீட்டர் பார்க்கர் என்கிற ஸ்பைடர் மேன், தனது தவறை சரிசெய்ய தன்னைப் பற்றிய நினைவுகளை மக்களிடம் இருந்து அகற்றியதால், நண்பனும், காதலியும் யாரோவா கிப் போகின்றனர். இப்பாகத்தில், தனிமை தரும் மனஅழுத்தம் பீட்டர் பார்க்கரின் சிலந்தி டி.என்.ஏ.,வை பாதிக்கிறது. இந்த நிலையில் திடீர் வில்லி முளைக்க, சமாளித்தாரா ஸ்பைடர் மேன்?

உடல் எடை கூட்டி 'சிக்ஸ் பேக்' உடற்கட்டுடன், வளர்ந்த ஸ்பைடர் மேனாக வந்திருக்கிறார் டாம் ஹாலண்ட். பள்ளிக்கல்வி முடித்த பையன் நிலையில் இருந்து வாழ்வின் நல்லது கெட்டதுகளை எதிர்கொள்ளும் ஸ்தானத்திற்கு வந்துவிட்ட ஸ்பைடர் மேனின் உளவியலை மையப்படுத்தி சுழல்கிறது திரைக்கதை.

அவெஞ்சர்ஸ் வெற்றிக்குப் பிறகு 'மார்வெல்' படங்களின் அடையாளமே மாறிவிட்டது; இந்த பாகத்தின் மூலம் 'மல்டிவெர்ஸ்' அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தெல்லாம் ரசிகர்கள் கணக்கு போடுகின்றனர். அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, இதில் ஜீன் கிரே எனும் 'எக்ஸ் - மென்' பாத்திரத்தை அவெஞ்சர்ஸ் கூட்டத்துடன் இணைத்திருக்கின்றனர்.

ரசிக மனதிற்கு நன்றாக தீனி போட்டிருக்கிறது படக்குழு. 'ஹல்க் - ஸ்பைடர்மேன்' மோதல், நிஞ்சா கொலையாளிகள் உடனான சண்டை, சிலந்தி வலையில் தொங்கியபடி நியூயார்க் நகர கட்டடங்களுக்கு மத்தியில் பறப்பது உள்ளிட்ட காட்சிகள், 'சூப்பர் ஹீரோ' படங்களுக்கான சாகச உணர்வை முப்பரிமாணத்தில் தருகின்றன. சிலந்தி வலையோடு இதில் ஸ்பைடர் மேனின் பிரத்யேக ஆயுதங்கள் சுவாரஸ்யம்!

தனிமை, ஆழ்ந்த துக்கம், பிரிய மானவர்களின் இழப்பு தரும் மன அழுத்தத்தை எதிர்த்து ஸ்பைடர் மேன் மீண்டு வருவது தன்னம்பிக்கை தருகிறது. இந்த டானிக் தெம் பூட்டினாலும், காதலி எம்.ஜே., உடனான முத்த காட்சிக்கு இந்தியாவில் 'வெட்டு' என்பதால் இதயம் நொறுங்குகிறது; இந்தவொரு கசப்பைத் தவிர்த்து மொத்த மும் தித்திப்பு.

ஆக...

இவ்வெற்றியை அரசியல் முதலீடாக்க தெரியவில்லை எனில், ஸ்பைடர் மேனே சிறந்த வெள்ளந்தி மனிதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us