sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

கல்லும் கலையும்: கலையாய் மின்னும் நன்றி!

/

கல்லும் கலையும்: கலையாய் மின்னும் நன்றி!

கல்லும் கலையும்: கலையாய் மின்னும் நன்றி!

கல்லும் கலையும்: கலையாய் மின்னும் நன்றி!


PUBLISHED ON : செப் 21, 2025

Google News

PUBLISHED ON : செப் 21, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கரன்கோவில் - கோவில்பட்டி சாலையின் கழுகுமலை. 'அரைமலை' என்று கல்வெட்டுகள் கூறும் இச்சிறு குன்றின் வடபுறச்சரிவில், பெருங்கரம் விரித்தபடி அய்யனார் கோவில் ஆலமரம்.

ஆலமர நிழல் படர்ந்திருக்கும் பாறையில், கிழக்கு மேற்காக சமண சிற்பங்களின் வசீகர அணிவகுப்பு; செதுக் கப்பட்டிருக்கும் சமண தீர்த்தங்கரர்கள், அவர்களது யட்சன், யட்சிகளிடம் சுண்டி இ ழுக்கும் கலைநயம். இவர்களில் ஒருவ ராய் கருப்பசாமி சன்னதிக்கு பின்னால் பார்சுவநாதர்!

மொட்டை தலை, அமைதி தவழும் முகம், அகன்று விரிந்த மார்புகள், நீண்ட கரங்களுடன் நெடிதுயர்ந்த துறவு கோலத் தில் ஆடையற்ற திகம்பரராய் பார்சுவ நாதர். இவருக்கு மேலே வலப்புறம், பகை உணர்வோடு கமடன்.

பின்னால்... நாக குடையாக தாக்குதல் தடுக்கும் 'நாகராஜா' தர்ணேந்திரன்; அவனது கைகளில் சாமரம். அருகில்... தர்ணேந்திரனின் எழில்மிகு மனைவி பத்மாவதி என, 'நன்றி' உணர்வு சொல்லும் சமணக்கதை வடிக்கப்பட்டுள்ளது.

'ஜைன மதத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர், தர்ணேந்திரன் - பத்மாவ தியை ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்ற, அன்றிலிருந்து இவரை காக்கும் யட்சன், யட்சியாக இருவரும் மாறி இருக்கின்ற னர்! யட்சனான தர்ணேந்திரனை மனித உருவில் செதுக்கியிருப்பது பாண்டிய சிற்பக்கலையின் தனித்துவம்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வெ.வேதாச்சலம்.






      Dinamalar
      Follow us