தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/கல்லும் கலையும்: களிறாகி கவரும் நவகன்னியர்

கல்லும் கலையும்: களிறாகி கவரும் நவகன்னியர்

கல்லும் கலையும்: களிறாகி கவரும் நவகன்னியர்


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் பார்வைக்கு தன் குன்றுடலை அசைத்து அடிவைத்து வரும் யானை போலத்தான் தெரியும் இச்சிற்பம். கொஞ்சம் நிதானித்து கவனித்தால் யானையின் உருவத்திற்குள் ஒன்பது பெண்கள் ஒளிந்திருப்பது புரியும். இது, இந்திய சிற்பக்கலையின் ஓர் தனித்துவ கற்பனை!

மதிமயக்கும் இந்நவநாரி குஞ்சரம், திருநெல்வேலி வள்ளியூரிலிருந்து 15 கி.மீ., தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவிலின் சித்திர கோபுர பக்கவாட்டில் இருக்கிறது!

'நவநாரி குஞ்சரம்' எனும் இச்சிற்பத்தில் இருக்கும் பெண்கள் பூரண அலங்காரத்தில் மிளிர, அவர்களில் நால்வர் யானையின் கால்களாக, இரு பெண்கள் தலையாக, இருவர் கால்மடித்து உடலாக, ஒன்பதாமவள் யானையின் பின்பாகமாகி வாலாக சமைந்திருக்கிறாள்!

பெண்களின் வனப்பு மற்றும் ஆடைகளின் நளினத்தில் யானையின் கால்கள், பெருவுடலை வடித்திருக்கும் சிற்பி, தலையை இப்படி வடித்ததில் தன் கற்பனையின் உச்சம் தொட்டிருக்கிறார்; ஆம்... இரண்டு பெண்களில் ஒருத்தி சற்றே குத்துக்காலிட்டு கால்களை விரித்தபடி இருக்க, அந்த இடைவெளியில் பொருந்தி முன்னவளின் முகத்தோடு முகம் வைத்து தோள் அணைத்து தொங்குகிறாள் இரண்டாமவள்!

இவளது வனப்பும், தொங்கும் கால்களின் நளினமும் யானையின் துதிக்கையாகி ஜாலம் காட்ட, முதலாமவளின் பிருஷ்ட செழுமை யானையின் தாடையாகவும், அவள் பாதங்கள் தந்தங்களாகவும் மாறி நிற்கின்றன!

'நான் கன்னியரின் உடலழகில் களிறை கட்டமைக்கத் தெரிந்தவன்' என, சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெகஜால சிற்பி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us