sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

வா வாசி யோசி

/

வா வாசி யோசி

வா வாசி யோசி

வா வாசி யோசி


PUBLISHED ON : அக் 05, 2025

Google News

PUBLISHED ON : அக் 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரசிகர்கள் தரும் பணத்திற்காக மக்களை மகிழ்விப்பவர்கள் சினிமா கலைஞர்கள்; மக்கள் காணாத வாழ்க்கையை மக்கள் பணத்தில் அனுபவிப்பவர்கள் அரசியல்வாதிகள்' எனும் தெளிவான சிந்தனை கொண்டிருக்கும் நெல்லை எஸ்.ஏ.வி., சகாய தாய் மகளிர் கல்லுாரி மாணவியரின் மதிப்பிற்குரிய மனதில் யார்?

*'கர்நாடகாவின் குக்கிராமத்தில் பிறந்து, 'ஏழ்மை, பார்வையின்மை' சவால்களை தகர்த்து, 'பார்வையற்றோர் டி20 உலக கோப்பை - 2012'ல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வெற்றியை இந்தியர்களின் வசமாக்கி, 'முயற்சித்தால் எதுவும் முடியும்' என்று நிரூபித்த 'பத்மஸ்ரீ' சேகர் நாயக் என் வழிகாட்டி!'

- த.தேவதர்ஷினி, பி.காம்.,

*'மண் வளம், நீர் வளம், உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தஞ்சை மண்ணிலிருந்து உலகிற்கு பரப்பியவர்; 'விவசாய நிலங்கள் விவசாயத்திற்கே; நெல்லின் அடி மண்ணுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு' என்று உணர்த்திய 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் அய்யா வழியில் எப்போதும் நான்!'

- பா.ஸ்வேதா, பி.காம்.,

*'மிக் 21 - பைசன்' போர் விமானத்தை தனியாக இயக்கியவர்; 'வெளிநாட்டின் போர் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய பெண் விமானி' எனும் சாதனைகளால் ஈர்த்து, என் ராணுவ சேவை கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி அவனி சதுர்வேதி என் குரு!'

- சி.சுசித்ரா, பி.எஸ்சி.,






      Dinamalar
      Follow us