sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சுயநலத்திற்காக கொள்கைகளை அடகு வைக்கும் அரசியல்வாதிகளையோ, தன் வளர்ச்சிக்காக ரசிகர்களின் வாழ்வை தடம் மாற்றும் சில நடிகர்களையோ நாங்கள் பின்தொடர்வதில்லை' எனச் சொல்லும் இவர்கள் ராம நாதபுரம், கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லுாரியின் மாணவ, மாணவியர்; இவர்களின் மனம் கவர்ந்தோர் யார்?

'சவுதி 'ப்ரோ லீக்' போட்டியில், 'அல் நஸர்' அணிக்காக போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைகீழாக சுழன்று 'பை சைக்கிள் கிக்' அடிக்கையில் அவருக்கு வயது 40. 'சுய உந்துதலில் உற்சாகம் பெற்று உயர்ந்து வருபவன் நான்' எனச் சொல்லியபடி வாழ்ந்து காட்டும் அவரே என் குரு!'

பா.விக்ரம், வணிகவியல்

'படிப்பு வாசனை அறியாத குடும்ப பின்னணி எனினும், தன் கனவான ராணுவ வீரர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து, தட்டுத்தடுமாறி 9ம் வகுப்பு கடந்து, 10ம் வகுப்பு பாடங்களை ஆண்டிற்கு இரண்டென எழுதி முடித்து, இன்று எல்லை பாதுகாப்பு படை வீரராக நிற்கும் என் தந்தையை மிஞ்சும் ஹீரோ யார்?'

த.பூமீனா, வரலாறு

'ராமநாதபுரம் என்றால் பெருமதிப்பு வர வேண்டும் எனச்சொல்லி, 100 பெரிய கிராமங்கள், 300 சிறிய கிராமங்கள் என, 3,000ற்கும் அதிக கண்காணிப்பு கேமராக்களை மாவட்டம் எங்கும் பொருத்தி 'காவல்' என்பதன் அர்த்தம் காக்கப் போராடும் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்களை வியக்கிறேன்!'

பூ.முத்து சேதுபதி, அரசியல் அறிவியல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us