தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : நவ 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒளியின் பாதையில் எங்கள் பயணம்

'பொதுநலனை விட எனது நலன் முக்கியம்' எனக் கருதும் அரசியல்வாதிகளையோ, 'சினிமா துறையில் ஜெயிக்க கடும் உழைப்பு தேவை' என்றபடி வாரிசுகளை வெள்ளித்திரையில் வளர்த்துவிடும் நடிகர்களையோ நாங்கள் பின்பற்றுவது இல்லை' எனச் சொல்லும் இவர்கள், திருப்பூர், உடுமலை வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்!

'ஜிம் க்ரோ' எனும் பிரிவினை சட்டத்தால் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீதான ஒடுக்குதல் நிகழ்ந்த சூழல் அது; டிசம்பர் 1, 1955 அன்று, பேருந்தில் வெள்ளைக்கார பயணிக்கு இருக்கை தர மறுத்து கைதான ஆப்ரிக்க அமெரிக்க குடியுரிமை செயற்பாட்டாளர் ரோசா பார்க்ஸின் துணிச்சல், 'மான்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு' அறப்போராட்டத்திற்கும், நிறப்பாகுபாடு சட்டம் தகர்ந்து போகவும் காரணமானது. 'மாற்றம்' நிகழ்த்திய இவர் என் வாழ்வின் விளக்கு!'

ஆ.காவியாதர்ஷினி, எம்.ஏ.,

'குக்கிராமத்து ஏழைத் தொழிலாளியின் மகன் நான்; உடுமலை 'லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி நினைவு அறக் கட்டளை' மூலம் அரசு போட்டித் தேர்வுகளுக்காக என்னை செதுக்கி வருகிறேன். மறைந்த மகன் மற்றும் மனைவியின் நினைவாக இந்த அறக்கட்டளையை 2023ல் நிறுவி நடத்திவரும் கே.ஆர்.எஸ்.செல்வராஜ் அய்யா வழியில், எளியவர்களின் கனவுகள் நிறை வேற நானும் கை கொடுப்பேன்!'

தி.விஷ்ணு பாரதி, பி.காம்.,

'லண்டனில் பிறந்த விர்ஜீனியா வூல்ப்; இருபதாம் நுாற்றாண்டின் நவீனத்துவ பெண் எழுத்தாளர்; ஒன்பது வயதில் 'ஹைடு பார்க் கேட் நியூஸ்' எனும் பத்திரிகையை வழிநடத்தியவர்; ஆளுமை பொலிவோடு வாழ்ந்தவர்; வாழ்ந்ததை அப்படியே எழுதியவர்; பெண்களின் அறிவுசார் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆண் சமூகம் குறித்து, 1929ல் 'ஏ ரூம் ஆப் ஒன்ஸ் ஓன்' புதினம் வழியே பெண்களின் ஆழ்மன சிக்கல்களை பேசியவர்; இவரே என் ஆச்சரியம்!'

அ.காளீஸ்வரி, எம்.ஏ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us